Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23.06.2025
Share:

By Village Missionary Movement

Monday, 23-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 23.06.2025

 

விலையேறப்பெற்றது

 

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?..." - மத்தேயு 16:26

 

ஜான் ஸ்மித், "அழிந்து போகும் ஆத்துமாக்களை காணும்போது என் இருதயம் நொறுங்குகிறது. ஆத்துமாக்கள் இரட்சிப்பை நான் காண கூடாததாகில் நான் உயிர்வாழ்வதில் பிரயோஜனமில்லை. கர்த்தாவே, ஆத்துமாக்களைத் தாரும் அல்லது நான் மடிந்து போகிறேன்" என்று கூறி கதறி கதறி அழுது ஜெபிப்பாராம் இந்த தேவ மனிதர்.   

 

நாம் வாழும் தேசம் பக்தி நிறைந்த தேசம். இத் தேசத்தில் வாழும் நமக்கு இரட்சிப்படையாத ஆத்துமாக்களைக் குறித்த எண்ணம் இருக்க வேண்டும். மக்கள் தங்கள் பாவம் கழுவப்பட, புண்ணியம் கிடைக்க, மோட்சம் சென்றடைய வேண்டும் என்று சொல்லி தங்களை வருத்திக் கொள்கின்றனர். இதனைப் பார்க்கும் போது நம் உள்ளம் உடைய வேண்டும். இவர்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த தேவன், அன்போடு தம்மிடம் வருபவருக்கு இலவசமாய் மக்கள் தேடும் பாவ விமோச்சனத்தைத் தர வல்லவராயிருக்கிறார். மோட்சம் சேர ஒரே வழி அவரே. இதை அறியாமல் இலவசமாய் பெற்றுக்கொள்ள வேண்டியவற்றிற்காக உடலை வருத்துவதைப் பார்க்கும் போது நம் உள்ளம் அவர்களுக்காக பரிதவிக்க வேண்டும். ஏனெனில் ஆத்துமா விலையேறப்பெற்றது. ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஆத்துமா மோட்சம் சேரும் வழியை அறியாமல் இருந்தால், உலகத்தில் சேர்த்து வைத்தவற்றால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. தன் ஆத்துமாவிற்கு ஈடாய் எதையும் செலுத்த முடியாது. ஏனெனில் நாம் பிறப்பதும், பின்பு மரிப்பதும் ஒரு முறை மட்டுமே. அதன் பின் நியாயத்தீர்ப்பு தான் உண்டு. உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட, மீட்பை பெற்றுக்கொள்ள சிலுவையண்டை வாருங்கள்.  

 

ஏனெனில் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் பெற வேண்டிய தண்டனையை இயேசு கிறிஸ்து தாமே சிலுவையில் ஏற்றுக்கொண்டார். உங்கள் பாவங்கள் மட்டுமல்லாமல், உங்கள் துக்கம், கவலை, கண்ணீர், பெலவீனம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, மரித்து மீண்டும் உயிரோடெழுந்து பாவத்திலிருந்து மீட்பை இலவசமாய் தரும்படி ஆவலோடிருக்கிறார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என தம் இரு கைகளையும் விரித்தவராய் ஆவலோடிருக்கிறார். இன்னும் இரட்சிப்பை பெற வில்லையா? இன்றே அவரிடம் சென்று இலவசமாய் மீட்பை பெற்றுக்கொள்வோமாக. ஆமென்.

- Mrs. கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:-

ஆமென் வில்லேஜ் டி.வி ஊழியங்களின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al