Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.06.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 22-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 22.06.2025 (Kids Special)

 

ஞானமுள்ள பிள்ளை

 

"நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்" - நீதி. 23:24

 

எங்குப்பார்த்தாலும் பச்சைப்பசேலென்று காணப்படும் ஒரு அழகான, செழிப்பான கிராமம் தான் நரியன்பட்டி. அந்த கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றில் எப்பொழுதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டேயிருக்கும். ஜேக்கப், ஜோன்ஸ் என்ற இரு நண்பர்களும் பள்ளி முடிந்ததும் எப்போதும் ஆற்றங்கரைக்கு போவார்கள். சில நண்பர்களோடு சேர்ந்து அந்த ஆற்றின் மணலில் விளையாடுவார்கள்.   

 

மாலை 6 மணிக்கு ஜோன்ஸின் அம்மா சத்தமிட்டு கூப்பிடும் போது அவன் மிகவும் வெறுப்போடும், கோபத்தோடும் செல்வான். ஆனால் ஜேக்கப்போ அம்மா கூப்பிடுவதற்கு முன்பாகவே வீட்டிற்கு சென்று home work எழுதி, பெற்றோருக்கு கீழ்படிந்து நடப்பான். ஜோன்ஸ் வீட்டிற்கு போனாலும் home work எழுதவோ, அம்மாவுக்கு கீழ்படியவோ மாட்டான். தினமும் இதே நிலைதான். அவனுக்காக அவன் அம்மா கண்ணீர் வடித்து ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாளும் அதே போல் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றார்கள். 6 மணி ஆனதும் ஜேக்கப் வீட்டிற்கு சென்று அன்று பள்ளியில் கற்றுக்கொடுத்த பாடங்களை படித்து ஞானமுள்ள பிள்ளையாக நடந்து கொண்டான். ஆனால் ஜோன்ஸின் அம்மா எவ்வளவோ அழைத்தும், அவன் நான் வரமாட்டேன் என்று கூச்சலிட்டான். வருத்தத்தோடு திரும்பிசென்ற அம்மாவை சில நாட்களாய் கவனித்துக் கொண்டிருந்த போதகர், ஜோன்ஸின் அருகில் வந்து, அவன் தோளில் கை போட்டுக்கொண்டு, உன்னோடு கொஞ்சம் பேசலாமா? என்று கேட்டுக் கொண்டே அவனை அழைத்துச் சென்றார்கள். 

 

நான் உன்னை தினமும் இந்த ஆற்றங்கரையில் பார்க்கிறேன். எதற்காக உன் அம்மாவிடம் அப்படி நடந்து கொள்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன் ஐயா, என் அம்மாவுக்கு என் மேல் பாசமே கிடையாது. என்னை கொஞ்சங் கூட பிடிக்காது. எப்பொழுதும் படி படின்னு சொல்வாங்க. நான் எதாவது கேட்டா வாங்கித்தர மாட்டாங்க. ஆனால் ஜேக்கப் வீட்டில் அவனை செல்லமாக பார்த்துக் கொள்வாங்க, கேட்டதையும் வாங்கிகொடுப்பாங்க என்றான். ஜேக்கப் போல நீ கீழ்படிந்து, “Jesus” க்கு முதலிடம் கொடுத்து ஞானமுள்ள பிள்ளையாய் நடந்து கொண்டால், உன்னை எல்லாருக்கும் பிடிக்கும் என்று அறிவுரை கூறினார் போதகர். யோசித்துக் கொண்டே சென்ற ஜோன்ஸின் உள்ளத்தில் போதகரின் வார்த்தை பேசிக் கொண்டே இருந்தது. முதலாவது இயேசுவை தேட ஆரம்பித்தான். காலையில் எழுந்தவுடன் முழங்காலில் நின்று ஜெபித்தான். இதை பார்த்த அம்மாவின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் போனது.    

 

அன்பு தம்பி, தங்கச்சி, இந்த புதிய கல்வி ஆண்டில் நீ ஞானமுள்ள பிள்ளையாய் வாழ, இயேசு கிறிஸ்துவிடம் உன்னை அர்ப்பணித்து விடு, கர்த்தர் தாமே உன்னை ஆசீர்வதிப்பாராக.   

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet