Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19.06.2025
Share:

By Village Missionary Movement

Thursday, 19-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 19.06.2025

 

ஊக்கமான வேண்டுதல்

 

"...ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" - யாக்.5:16

 

சீனாவில் எழுப்புதலுக்கு காரணமாயிருந்த ஹட்சன் டெய்லர் என்ற ஊழியரை குறித்து அநேகருக்குத் தெரியும். அவருடைய தாயார் ஊக்கமாக ஜெபிக்கும் ஒரு ஜெப வீராங்கனை. அவர்களுடைய ஜெபத்தினால் அவர் இரட்சிக்கப்பட்டார். அவர்கள் எப்போதும் ஹட்சன் ஒரு பெரிய தேவ ஊழியராக வேண்டும் என்று ஜெபித்து வந்தார்கள். ஆனால் அவரோ தனது 15 வது வயதில் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்த பின் ஜெபிக்க மறந்து, கிறிஸ்தவர்களை கேலி கிண்டல் செய்து, தேவனற்றவராகவே வாழ்ந்து வந்தார். அது அவருடைய தாயாருக்கு மிகவும் வேதனையாகவே இருந்து வந்தது.  

 

ஒரு முறை ஹட்சனின் தாயார் மத்தியான வேளையில் தன்னுடைய மகனுக்காக ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அன்று ஹட்சனுக்கு விடுமுறை என்பதால் தன்னுடைய தகப்பனின் அறைக்குள் சென்று ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தேடினார். 'எல்லாம் முடிந்தது' என்ற கிறிஸ்தவ கைப்பிரதி அவருக்கு கிடைத்தது. அதை படித்த போது ஆவியானவர் அவரிடம் இடைப்பட்டார். அந்நாளில் தானே ஹட்சன் இரட்சிக்கப்பட்டு புது மனிதனாக மாறினார்.    

 

வேதத்தில் யாக். 5:16 ல் கூட நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? எனவே ஒருவருக்காக நாம் செய்யும் ஜெபம் மிகவும் பெலனுள்ளது. அன்றைக்கு பவுலும், சீலாவும் நடுராத்திரியில் சிறைச்சாலையிலே செய்த ஜெபத்தின் மூலம் சிறைச்சாலையின் கதவுகள் அசைந்தது மாத்திரமல்ல, சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்பட்டார்கள். (அப். 16:30-32)

 

பிரியமானவர்களே! ஹட்சனின் தாயார் ஜெபித்ததைப் போல உங்கள் குடும்பம் மற்றும் சொந்தங்களுடைய இரட்சிப்பிற்காக நீண்ட நாட்களாக நீங்கள் ஜெபித்துக்கொண்டு இருக்கிறீர்களா?அவர்கள் ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தமாக, விடுதலை இல்லாமல் அடிமையாய் இருப்பதை உணருகிறீர்களா? மேலும், ஒரு காரியத்தில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்களா? அவர்களுக்காக நீங்கள் செய்யும் ஊக்கமான ஜெபத்திற்கும், வேண்டுதலுக்கும் நிச்சயம் தேவன் பதில் தருவார். நாம் செய்கின்ற ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. ஆமென்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:-

மிஷனெரி பிள்ளைகளுக்கான பள்ளி ஆரம்பிக்க உள்ள தடைகள் நீங்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet