By Village Missionary Movement
Wednesday, 18-Jun-2025இன்றைய தியானம்(Tamil) 18.06.2025
பலவான் கையிலுள்ள அம்பு!!
"வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்" - சங்கீதம் 127:4
தற்போது IPL கிரிக்கெட் சீசன் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 14 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவம்சி உலக சாதனை படைத்தார். அது என்னவென்றால் 14 வயதில் IPL அணியில் இடம் பெற்ற முதல் நபர் என்ற சாதனை தான். மேலும் அந்த ஒரு குறிப்பிட்ட போட்டியில், வெறும் 38 பந்துகளில் 101 ரன்களை அடித்து விளாசி உலக சாதனை படைத்தார். மிகவும் குறைந்த வயது அதாவது 14 வயது, 23 நாட்கள் மட்டுமான இளம் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீரர் 38 பந்துகளில் சதமடித்ததை அந்த அணியினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த IPL குழுவும், பெரிய பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களும் கொண்டாடி, அந்த இளம் வாலிப வீரரைப் பாராட்டினார்கள். அவருடைய சொந்த மாநிலமான பீஹாரில் அரசு சார்பில் அவருக்கு வெகுமானமும், கௌரவமும் கொடுக்கப்பட்டது. வைபவ் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடினாலும், இப்படிப்பட்ட குறைந்த வயதுள்ள ஒரு வீரரை அதுவும் அந்த அணியின் முதல் வீரராக அதாவது Opening batsman ஆக களம் இறக்கியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எல்லாத் தரப்பினரும் பாராட்டினார்கள்.
பரிசுத்த வேதாகமம் இளம் வாலிபர்களை மிகவும் அழகாக சித்தரிக்கிறது. இந்த வயதின் பிள்ளைகள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தவறிய தருணங்களையே சொல்லி சொல்லி அவர்களைக் குறித்த தன்னம்பிக்கையை இழக்க வைத்து விடாமல் அவர்களுக்குள் இருக்கும் நல்ல திறமைகளை இயேசுவுக்காய் வெளியே கொண்டு வந்து பலவான் கையின் அம்புகளாய் மாற்றுவது நம் வேலையாக இருக்கட்டும்.
பிரியமானவர்களே! இன்று வாலிபர்களை உற்சாகப்படுத்துகிற தலைவர்கள் நமக்குத் தேவை. அவர்களுடைய திறமையைக் கண்டறிந்து அதற்கேற்ற விதத்தில் அவர்களை உற்சாகப்படுத்தி நடத்த வேண்டும். கிறிஸ்தவ வட்டாரத்தில் இதை செய்யாததினால் இன்றைக்கு அநேக இளம் வாலிபர்களின் திறமைகள் பல நிறுவனங்களுக்காகவும், முதலாளிகளின் முன்னேற்றத்திற்காகவும் விட்டுக் கொடுத்து விட்டோம். எனவே சபைகளும், ஸ்தாபனங்களும் வாலிபர்களை சரியான வழிகாட்டுதலுக்குள் கொண்டு வந்தால் அவர்கள் பலவான் கையிலுள்ள அம்புகளாய் மாத்திரமல்ல இயேசுவுக்காய் தேசத்தை கலக்குகிறவர்களாயும் மாற்றலாம். ஆமென்!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
மாவட்டம் தோறும் 300 கிதியோன்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864