Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.06.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 17-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 17.06.2025

 

தேவன் தேடும் மனிதர்கள்

 

"...தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்..." - யாக். 4:6

 

ஒவ்வொரு ஞாயிறும் மாலை 6 மணிக்கெல்லாம் வெளுத்துப் போன ஜீன்ஸ் பேண்ட்டும், பழைய டீ-சர்ட்டும், சாதாரண செருப்பும் போட்ட ஒரு பெண், ஆலயத்தில் உள்ள எல்லா நாற்காலிகளையும் துடைத்து, மேடையில் உள்ள பூக்களை எல்லாம் சரி செய்வார்கள். இவர் கடந்த 6 வருடங்களாக எல்லா வாரமும் தவறாமல் இதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு நாள் அந்த ஆலயத்திற்கு தன்னுடைய பென்ஸ் கார்-ல், சிறந்த உடை அணிந்த வாலிபர் ஒருவர் சற்று சீக்கிரமாகவே வந்திருந்தார். ஒரு நாற்காலியில் அமர்ந்து இந்தப் பெண் செய்யும் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். பாவம் இவர் ஒரு வேளை தன் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலை செய்பவராக கூட இருக்கலாம் என எண்ணி, இவருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று முடிவு செய்து, கார்-ல் இருந்து 100 டாலர்களை எடுத்து வந்து, அவர் செய்த வேலைகளைப் பாராட்டி அந்த 100 டாலர்களை கொடுக்க முயன்றார். ஆனால் அவர்களோ அதை வாங்க மறுத்தார்கள். அவர்களிடம் தயவு செய்து இதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தியும், அதை வாங்க மறுத்துவிட்டார்கள். என்னுடைய கார்-ல் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். உடனே அவர்கள் நான் எனது கார்-ல் செல்கிறேன் என்று கூறி, தன்னுடைய BMW கார்-ல் இருந்து ஒரு விசிடிங் கார்டையும் கொடுத்தார்கள். கார்டை பார்த்த அவர் திகைத்துப் போனார். ஏனென்றால் அவர் அந்த நகரின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை அறிந்து கொண்டார். ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை செல்வந்தனாக உலகிற்கு காண்பிக்கிறவர்களும் உண்டு. ஆனால் சிலர் மிகுந்த செல்வ செழிப்பான வாழ்வின் மத்தியிலும் தங்களை தாழ்த்தி, பெருமையென்னும் வலையில் விழுந்து விடாமல், தங்களை மறைத்துக் கொள்ளுகிறதும் உண்டு. எது எப்படியோ, பெயர், புகழ், பெருமையை நாடி ஓடுகிற உலகில் நாம் நம்மை தாழ்மையாக பார்த்துக்கொள்வோம்.

 

இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே, சோதனைக்காரன் இயேசுகிறிஸ்துவிடமே பெருமையான காரியங்களை காண்பித்து சோதித்தான். அப்பொழுது இயேசு அப்பாலே போ சாத்தானே என்று விரட்டியடித்தார். இயேசு கிறிஸ்துவும் சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (பிலி. 2:8). இந்தப் பணக்காரப் பெண்மணி எப்படி தன்னை மறைத்து தாழ்மையுடன் செயல்பட்டார்களோ, அதைப் போலவே நாமும் தாழ்மையாக செயல்பட வேண்டும். நாமும் எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்றே செய்வோமாக. அப்பொழுது கர்த்தரால் இம்மையிலும் மறுமையிலும் பலனைப் பெறுவோம். ஆமென்.

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:-

1000 மிஷனெரிகளைத் தாங்கும் 1000 ஜெபக்குழுக்கள் எழுப்பப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al