Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.06.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 08-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 08.06.2025 (Kids Special)

 

Happy Birthday

 

“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;..." - மத்தேயு 5:13

 

குட்டி செல்லங்களே! அடுத்த Class போயிட்டீங்களா? புது Teacher, புது Class room , புது Friends கூட கிடைத்திருப்பாங்களே, ரொம்ப ஜாலிதான். இந்த புதிய கல்வியாண்டில், துவக்கத்திலிருந்தே நல்லா படிக்கணும். O.k வா குட்டீஸ். இந்த உலகத்தில் இருக்கிற எல்லார் வீட்டிலும் கிடைக்கக் கூடிய ஒன்றை பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம். அது இல்லையென்றால் நாம் சாப்பிடவே முடியாது அது என்னவென்று தானே யோசிக்கிறீங்க. என்னது க்ளு... கொடுக்கவா... சரி Story start பண்ணிடுறேன்.

 

ஒரு ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லாருக்கும் உதவி செய்வார். அந்த வீட்டில் சமையல் செய்கின்ற ஒரு aunty இருந்தாங்க, நல்லா சுவையா சமைப்பாங்க. அந்த பணக்காரருக்கு பிறந்த நாள் வந்தது. உறவினர்களும், நண்பர்களும் தங்கம், வெள்ளி, வைரத்தில் வித்தியாசமான gifts எல்லாம் கொடுத்தாங்க. பணியாளர்கள் வந்து முதலாளியை வாழ்த்திவிட்டு விருந்து சாப்பிட்டு விட்டு போனாங்க. மறுநாள் அவர் கொடுத்த பரிசுகளையெல்லாம் பிரித்து பார்த்தார். வைர மோதிரம், தங்க வாட்ச் இன்னும் பலவிதங்களில் Super ரா இருந்தது. ஒரு பார்சல் மட்டும் வெயிட்டா இருந்தது. பிரித்து பார்த்தால் உப்பு பாக்கெட், ஐயய்யோ யார் இதை கொடுத்தது... அதில் சமையல் வேலை செய்கின்ற aunty பெயர் எழுதியிருந்தது. அந்த முதலாளிக்கு ரொம்ப கோபம் வந்தது.

 

உனக்கு அறிவு இருக்குதா? உப்பை போய் யாராவது கொடுப்பாங்களா? எடுத்துட்டு போ என்று திட்டினார். இயேசப்பா கூட நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்னாங்க. இதை நினைச்சி நாம் உப்பை கொடுத்தோம் ஆனால் முதலாளி ரொம்ப கோபமாகிவிட்டாரே, என்று நினைத்துக் கொண்டே, அந்த நாள் சமைத்த சாப்பாட்டில் உப்பு போட மறந்து விட்டார்கள். அந்த பணக்கார வீட்டிலுள்ள எல்லாரும் சாப்பிட உட்கார்ந்து விட்டு சாப்பாடு வேண்டாம், சாப்பாட்டில் சுவையே இல்லை என்று எல்லாரும் எழுந்து சென்று விட்டார்கள். அப்போதான் முதலாளி யோசித்தார் உப்பு எவ்வளவு முக்கியமானது என்று. எனக்கு கிடைத்த தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த gift ஐ எல்லாம் சாப்பிட முடியாது. இப்ப தேவை அந்த உப்பு தான் என்றார். வேலைபார்க்கும் aunty வேகமா உப்பை எடுத்து வந்து தேவையான அளவை எல்லாருடைய சாப்பாட்டிலும் போட்டு கலந்து விட்டாங்க. சந்தோஷத்தோடு வயிராற எல்லாரும் சாப்பிட்டு கொண்டே உப்பின் அவசியத்தை அறிந்து கொண்டார்கள்.

 

என்ன செல்லங்களே! "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழி சரியாதானே இருக்குது. நீங்களும் உப்பு போல மற்றவர்களுக்கு சுவைதர கூடிய வாழ்க்கை வாழ வேண்டும். Jesus உங்க கூட இருந்தாலே, எல்லாருக்கும் ஆசீர்வாதமாய் மாறிடுவீங்க. சரிதானே குட்டீஸ்!

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al