Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.06.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 07-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 07.06.2025

 

கோபத்தை தவிர்த்து விடு

 

"...என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்" - யாக்கோபு 1:19

 

தன் புதிய காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அப்பா. அப்போது அவருடைய மூன்று வயது மகள், காரின் அருகே நின்று தானும் கார் துடைப்பது போல் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஒரு சிறிய கல்லை எடுத்து அந்த காரில் ஏதோ கிறுக்கி விட்டாள். அதை கண்டு கோபமடைந்த அந்த தகப்பன், அருகே கிடந்த ஒரு கட்டையை எடுத்து அந்த குழந்தையின் கையில் நன்றாக அடித்து விட்டார். குழந்தை வலியில் துடித்து போய் விட்டது. கையில் அதிக ரத்தம் வழியவே, கலங்கிப் போன தகப்பன் பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்த்த போது, பிள்ளையின் கையில் எலும்பு முறிந்து போய் இருந்தது. மனமுடைந்த அவர் கண்ணீர் விட்டு குழந்தையை அணைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார். உடனே அந்த குழந்தை தகப்பனை காரின் அருகே அழைத்துச் சென்று, "அப்பா, I Love you so much " என்று தான் எழுதியதாக காண்பித்தாள். தகப்பனின் உள்ளம் நொறுங்கி போனது. அவசரப்பட்டு கோபத்தில் செய்த காரியம் எப்படி முடிந்தது என்று தெரிகிறதா?

 

இன்றைய வேதபகுதியிலே, ஆதாம், ஏவாளின் பிள்ளைகளான காயீன், ஆபேலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காயீனும், ஆபேலும் தேவனுக்கு காணிக்கை செலுத்த வந்தனர். காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாக கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். காயீனையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்கவில்லை.

 

ஆபேலையும் அவன் காணிக்கையையும் தேவன் அங்கீகரித்தார். உடனே காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி : உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? என்று கேட்டார். நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் என்றார். காயீனை தேவன் சபித்தார். எபேசியர் 4:26 ல் "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்" என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். கோபம் நிஷ்டூரம் உள்ளது என சாலெமோன் ராஜா நீதிமொழிகளில் நம்மை எச்சரிக்கிறார். ஐந்து நிமிட கோபம் நம்மை நம் வாழ்நாள் முழுவதும் வருந்தச்செய்திடும். எனவே நாம் கேட்கிறதற்குத் தீவிரமாகவும், பேசுகிறதற்குப் பொறுமையாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்போம். தேவாசீர்வாதம் பெறுவோம்.

- Mrs.ஷீலா ஜான்

 

ஜெபக்குறிப்பு:-

பெண்களுக்கான "இனியவளே" என்ற நிகழ்ச்சி மூலம் பெண்கள் கிறிஸ்துவுக்காக செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al