Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.06.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 04-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 04.06.2025

 

அனாதைகள்

 

"...தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்" - சங்கீதம் 68:5

 

அனாதைகள் அதாவது திக்கற்றவர்களாய் நிர்கதியாய் இருப்பவர்களை குறித்து இன்று பார்ப்போம். இந்த நூற்றாண்டில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அனாதை இல்லங்கள், முதியோர் பராமரிப்பு மையங்கள் அதிகமாக பெருகி வருவதை நாம் பார்க்க முடிகிறது. பிறப்பாலும், சூழ்நிலையாலும் நிர்கதியாய் இருப்பவர்கள் அனேகர் உண்டு. பரிசுத்த வேதாகமத்தில் திக்கற்றவர்களை குறித்து 44 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய தேவன் திக்கற்றவர்களுக்கு தகப்பனாக காணப்படுகிறார்.

 

"வாழ்க்கைக்காக தத்தெடுக்கப்பட்டது" என்ற நூலின் ஆசிரியரான ரஸ்ஸல் மூர் என்பவர், ஒருமுறை ஆதரவற்ற சிறு பிள்ளைகளின் தத்தெடுப்பு மையத்தின் உள்ளே நுழைந்த போது, அங்கு மிகுந்த நிசப்தம் நிலவியது. அங்கு தொட்டிலில் தூங்கும் எந்த குழந்தையும் அழவில்லை. அவைகளுக்கு ஏதும் தேவையில்லை என்பதினால் அல்ல, மாறாக அழுதாலும் யாரும் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் அக்குழந்தைகள் தொட்டிலில் அமைதியாக உள்ளனர். விசாரிப்பாரற்ற நிலையில் உள்ள அந்த ஆதரவற்ற குழந்தைகளை பார்க்க வாருங்கள் என இந்த எழுத்தாளர் கூறுகின்றார்.   

 

2 சாமுவேல் 4:4 ல், மேவிபோசேத் என்பவரை பற்றி வாசிக்கின்றோம். இவர் சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன். இவர் இரண்டு காலும் நடக்க முடியாத முடவனாக காணப்பட்டார். தாயையும், தகப்பனையும் இழந்து தனியாக கைவிடப்பட்ட நிலமையில் இருந்த மேவிபோசேத்தை தாவீது ராஜா ஆதரித்து வந்தார். தன் அரமனையில் தங்க வைத்து தன்னுடன் நித்தம் போஜனம் பண்ணும்படிக்கு நல்லதொரு வாழ்க்கையை தாவீது ராஜா அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். தாவீதின் கரிசனையுள்ள இருதயத்தைப் பாருங்கள்!

 

அன்பானவர்களே, விசாரிப்பாரற்று இருக்கும் மக்களைத் தேடி விசாரிப்பதை நமது தேவன் விரும்புகின்றார். மேலும் அப்போஸ்தலனாகிய யாக்கோபு தனது நிருபத்தில் எழுதும் போது "திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது" என்று எழுதுகிறார். நம்மை சுற்றியுள்ள திக்கற்றவர்களுக்காக ஜெபிப்போம். இயன்ற மட்டும் கரிசனையாய் உதவி செய்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

- P.ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:-

 

50 இடங்களில் புதிதாக டியூஷன் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்..

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al