Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.06.2025
Share:

By Village Missionary Movement

Monday, 02-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 02.06.2025

 

உம்மோடு இருப்பதுதான்

 

"நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்;... எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்" - நீதி. 8:30

 

அன்பான ஆசிரிய பெருமக்களே, மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே இந்த கல்வியாண்டிற்கான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும், உயர்வையும், நன்மைகளையும் கொண்டு வரட்டும்.    

 

இப்புதிய கல்வியாண்டிலே, முதலாவது ஆண்டவருக்கென்று பிரத்தியேகமாக நேரத்தை ஒவ்வொரு நாளும் கொடுங்கள். உங்கள் சூழலுக்கு ஏற்றார் போல், காலையோ, மாலையோ, இரவோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஆண்டவருடன் செலவழியுங்கள். காலைதோறும் நாம் ஜெபித்து ஆண்டவரின் கிருபையைப் பெறுகிறோம் அல்லவா? அது போன்றே "வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்" என்பதற்கிணங்க, நம்முடைய நேரத்தை ஆண்டவருக்குக் கொடுக்கும் 'ஏனோக்'காக மாறுவோம். நாம் ஆண்டவருக்கென்று நேரத்தை ஒதுக்கும் போது, அந்தந்த நாளில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய தைரியத்தை, ஒத்தாசைகளை அண்டவர் நமக்கு கிருபையாய் தருகிறார். மேலும் யாருக்காக ஜெபிக்கிறோமோ, அவர்களுக்கும் நன்மையானக் காரியங்களை தந்தருளுவார். 

 

ஆண்டவர், தம்முடைய பிள்ளைகள், தமக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய திட்டத்தை, சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும் அவரைச் சேவிக்க வேண்டும் (1 நாளா. 28:9) என்றே விரும்புகிறார். நிறைய படிக்க வேண்டியுள்ளது, tuition, Project என நிறைய வேலைகள் உள்ளது, நான் எப்படி நேரத்தை ஒதுக்க முடியும் என்று மாணவர்கள் எண்ணுவதுண்டு. வேலைக்குச் செல்வது, வீட்டு வேலைகளைப் பார்ப்பது, பள்ளியின் வேலைபளுவும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது, நான் எப்படி நேரத்தை ஒதுக்க முடியும் என்று ஆசிரியர்கள் வேதனைப்படுவதுண்டு. சோர்ந்து போகாதிருங்கள்.

 

நீங்கள் அவருக்காக ஒரு அடி எடுத்து வைக்க முன் வந்தால் போதும், ஆண்டவர் தாமே உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கும் போது ஒருவேளை உங்கள் நண்பர்களோ, குடும்பத்தினரோ ஏளனம் செய்யலாம். மனம் தளராதிருங்கள். ஆண்டவருக்காக நீங்கள் நேரத்தைக் கொடுக்கும் போது ஆண்டவரின் அருளையும் மகிழ்ச்சியையும் முழுமையாக உணருவீர்கள். ஞானத்தையும், உணர்வையும், ஆலோசனையையும், பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் ஆவியானவர் நமக்கு தந்தருளுவார். ஆண்டவரின் கிருபை உங்களோடிருப்பதாக! ஆமென்.   

- Rev. எலிசபெத்

 

ஜெபக்குறிப்பு:-

இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின்பிரயாணப் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al