Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.06.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 01-Jun-2025

இன்றைய தியானம்(Tamil) 01.06.2025 (Kids Special)

 

முயற்சி செய்

 

“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" - சங். 37:5

 

ஒரு ராஜாவுக்கு இரண்டு கிளிக் குஞ்சுகள் பரிசாக கொடுக்கப்பட்டது. அந்த இரண்டிற்கும் பறக்கவும், பேசவும் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு ராஜா. அதுல ஒரு கிளி நன்றாக பறந்தது மட்டுமல்லாமல், ஒரு சில வார்த்தைகளையும் பேசவும் ஆரம்பித்தது. என்ன குட்டீஸ்! நீங்களும் கிளி வளர்த்திருக்கீங்களா? "சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை" ன்னு சொல்லுவாங்க. அது போல நாம் என்ன சொன்னாலும் அதை கேட்டு திரும்ப அப்படியே சொல்வதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்படித்தானே! நானும் குட்டி பிள்ளையாய் இருக்கும்போது எங்க வீட்டில் கிளி வளர்த்திருக்கிறேன். சரி... சரி... இன்னொரு கிளி என்ன ஆச்சுன்னு தானே நினைக்கிறீங்க. அது தான் பேசவே இல்லை. ஒரு மரக்கிளையில் உட்கார்ந்தபடியே இருந்தது, பறக்கவும் இல்லை.

 

ராஜா பெரிய பெரிய ஞானிகளைக் கொண்டு பயிற்சி கொடுத்துப் பார்த்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ஒரு விவசாயி ராஜாவிடம் நான் அந்த கிளியை பறக்க வைக்கிறேன் என்று சொன்னார். அடுத்த நாள் காலை ராஜா கண் விழித்து பார்த்த போது, அந்த கிளி மரத்தை சுற்றி அங்கு மிங்கும் பறந்து கொண்டிருந்தது. ராஜாவுக்கு சந்தோஷம் கலந்த ஆச்சர்யம். இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்கன்னு கேட்க, விவசாயி பணிவோடு, அது ரொம்ப சுலபமான காரியம் அரசே! நான் மரத்தில் ஏறி என்ன செய்தேன் தெரியுமா? அந்த பறக்காத கிளி உட்கார்ந்திருந்த கிளையை வெட்டி விட்டேன். கீழே விழப் போகிறோம் என தெரிந்ததும், தட்டுத் தடுமாறி பறக்க ஆரம்பித்தது என்றார். விவசாயி-யின் செயலை ராஜா பாராட்டி, வெகுமதிகளை கொடுத்து தன் அரண்மனை காவலாளியாய் பணியமர்த்தினார்.

 

அருமையான குட்டிச் செல்லங்களே! இப்படித்தான் நாமும் பல நேரங்களில், அந்தப் பறக்காத கிளியை போல ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, கடவுள் நமக்கு கொடுத்த திறமையை உணராமல், என்னால் முடியாது, எனக்கு பயமாக இருக்கிறது என்று எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விடுகிறோம். முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றால் வெற்றிக்கனியை பறிப்பது நிச்சயம் குட்டீஸ்! இயேசப்பா மேல் நம்பிக்கை வைத்து, உங்கள் திறமைகளை கண்டுபிடித்து, பயன்படுத்திப் பாருங்கள். அவர் காரியங்களை வாய்க்கச் செய்வார். ஆமென்.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al