Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.05.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 24-May-2025

இன்றைய தியானம்(Tamil) 24.05.2025

 

பிரயாசத்திற்கு பலன் உண்டு

 

"...கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்" - ரூத் 2:12

 

தன் இரதத்தில் ஒரு ராஜா காட்டு வழியே பிரயாணம் செய்தார். அவ்வழியே காட்டில் வாழும் இரண்டு குதிரைகள் வந்தன. சில நாட்களில் ராஜாவின் வேலைக்காரர் அக்குதிரைகளை அரண்மனைக்கு கொண்டு சென்று பயிற்சி கொடுத்தார். பயிற்சி கடினமாக இருந்ததால் தாக்குபிடிக்க முடியாமல் ஒரு குதிரை தப்பியது. சில நாட்களில் மழையில்லாமல் புற்கள் காய்ந்தன. குதிரையின் உடல் மெலிந்தது. ஆனால் ராஜ அரண்மனையிலுள்ள மற்றொரு குதிரை புஷ்டியாக சந்தோஷமாக இருந்தது. கடினமான பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்ததால் நல்வாழ்வு பெற்றது. 

 

வேதத்திலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அறிவு, ஞானம், நல்ல உடலமைப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் தேவனை மட்டும் பணிந்து, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்து வாழ எண்ணினர். இதற்கு அக்கினி சூளை போன்ற கஷ்டங்கள் வந்தது. தேவன் இதிலிருந்து தப்புவிக்க வல்லவர், தப்புவியாமல் போனாலும் பரவாயில்லை என துணிந்து நின்றனர். அதின் பலனாய் அந்த ராஜ்யத்தில் ராஜா முதல் அனைத்து மக்களும் தேவனை அறிந்து கொண்டனர். இவர்கள் அக்கினி சூளையைப் பார்த்து பயந்து பின்வாங்கியிருந்தால், அந்த ராஜ்யம் கர்த்தரை அறிந்திருக்காது. ஆம், உபத்திரவம், சோதனையைக் கண்டு பின் வாங்காமல் கர்த்தருக்காய் உறுதியாய் நிற்பவர்கள் இன்றும் தேவை. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில், "உலகத்திலே உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் உலகத்தை ஜெயித்தேன்" என்றார். உலகத்தை ஜெயித்த கிறிஸ்து, ஜெயித்த பெலனை தம் பிள்ளைகளாகிய நமக்குள் வைத்திருக்கிறார். ஆதலால் நம்மாலும் இவ்வுலகில் வரும் பாடுகள், வேதனைகள், உபத்திரவங்கள், வியாதிகள் ஆகியவற்றை ஜெயிக்க முடியும் என தைரியப்படுத்துகிறார். 

 

இதை வாசிக்கும் பிரியமானவர்களே! இவ்வுலக வாழ்வில் கிறிஸ்துவுக்காக எதையும் சகிக்க ஆயத்தமானவர்கள் நட்சத்திரங்களாய் பிரகாசித்து வருகிறார்கள். அநேக மிஷனெரிகள் கிறிஸ்துவுக்காக உபத்திரவத்திலும் உறுதியாய் நின்றனர். நாமும் கிறிஸ்துவுக்காக தைரியமாய் நிற்போம். அதற்கான விலைக்கிரயம் கொடுக்க நம்மை அர்ப்பணிப்போம். நாம் இவ்வுலகில் கிறிஸ்துவுக்காக படும் பிரயாசம் அனைத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் பலன் உண்டு என்பதை ஒரு போதும் மறக்க வேண்டாம். ஆகவே சோர்ந்து போகாமல் உற்சாகமாய் ஓடுவோம். அல்லேலூயா.

- Sis.எஸ்தர் செல்வி

 

ஜெபக்குறிப்பு

VBS ஊழியத்தின் மூலம் சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பை மட்டுமல்ல நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş