Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.05.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 21-May-2025

இன்றைய தியானம்(Tamil) 21.05.2025

 

ஆகாதென்று...

 

"வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று" - சங்கீதம் 118:22

 

1968 - ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிட்சர்லாந்து நாட்டின் கைகடிகாரங்கள் புகழ்பெற்றவை. உலக பங்கு சந்தையில் 68 ரூ பங்கு விற்பனையில், 80 ரூ லாபத்தில் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின் பங்கு விற்பனையில் 10ரூ குறைக்கப்பட்டது. அதனால் அடுத்து 3 வருடங்களில் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர். இன்று கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவார்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அவ்வளவாக புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள் கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால் படிகத்தை வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களை விட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களாக உற்பத்தி செய்யப்பட்டன. இந்த வகையான கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே. அதைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள் அதை உலகளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் வைத்த போது ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக்கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால் இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்தி பெற்று விளங்குகின்றன. ஆகாதென்று நிராகரிக்கப்பட்ட கண்டுபிடிப்பே மிகச் சிறந்ததாக மாறியது.  

 

நியாயாதிபதிகள் புத்தகத்தில் கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள். அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, யெப்தாவை வீட்டை விட்டுத் துரத்தினார்கள். இந்நிலையில் யெப்தா தோப் தேசத்தில் குடியிருந்தான். சில நாளைக்கு பின்பு அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள். கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்தார்கள். குடும்பத்தினர்களால் தள்ளப்பட்ட யெப்தா யுத்தத்தை தலைமைதாங்கி, அம்மோனியரை ஜெயித்தார். காரணம் தள்ளப்பட்ட சூழ்நிலையிலும் யெப்தா தன் காரியத்தை மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொல்லியிருந்தார்.

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! இன்று நீங்கள் யாரால் ஆகாதவர்களென்று தள்ளப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் விட்டிலோ, வேலை பார்க்கிற ஸ்தலத்திலோ? இல்லையென்றால், நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதினால் உங்கள் சொந்த உறவுகளால் உதறப்பட்டு தள்ளப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் காரியங்கள் எல்லாவற்றையும் தேவசந்நிதியில் சொல்வீர்களானால், நிச்சயம் எல்லாருடைய கண்கள் காண கர்த்தர் உங்களை உயர்த்துவார். ஏனென்றால் அவர் யாரையும் புறம்பே தள்ளுவதில்லை.

- Bro. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு :-

VBS எங்கெல்லாம் எடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş