Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.05.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 20-May-2025

இன்றைய தியானம்(Tamil) 20.05.2025

 

சுமக்கும் தகப்பன்

 

"ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல,..." - உபாகமம் 1:31

 

ராஜூ தன் மகள் மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தார். காரணம் தன் மகள் பிறந்தவுடன் அவரது மனைவி இறந்து போனதினால்! எனவே ராஜூ வேலைக்குச் செல்லும் போது தன் மகளை தன்னுடன் அழைத்தே செல்வார். பிள்ளைக்கு சோறு ஊட்டுவது, பிள்ளையை கவனிப்பது என எல்லாவற்றிலும் ராஜூ மிக கவனமாகவே பார்த்துக் கொண்டார். பள்ளிக்குச் செல்லும் வயது நெருங்கியவுடன் பள்ளியில் சேர்த்தார். எதிர்பாராத விதமாக ஒரு நாளில் பள்ளிவிட்டு திரும்பும் போது நடந்த விபத்தில் மகளின் காலில் அடிப்பட்டது. அதை பார்த்த தந்தை துடித்து போனார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் அந்த பிள்ளையால் நடக்க முடியாமல் போனது. இருப்பினும் தந்தை தனது மனதின் வேதனையை தன்னுள் அடக்கிக்கொண்டு, தினந்தோறும் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்றும் வந்தார். பிள்ளையை சுமந்து கொண்டு எங்கும் சென்றார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய மகளை எப்போதும் சந்தோஷமாகவே பார்த்துக்கொண்டார்.

 

இந்த தகப்பனை போலவே, வேதத்திலும் இஸ்ரவேல் ஜனங்களை தேவன் சுமந்து கொண்டு சென்றார். எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தார். அவர்களுக்கு மோசே என்ற தலைவரை ஏற்படுத்தி, வனாந்தரத்தில் அவர்களை வழி நடந்தி சென்றார். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என எதற்குமே குறைவு இல்லை. ஆனாலும் அந்த ஜனங்கள், சுமந்துகொண்டு வந்த தகப்பனாகிய கர்த்தரை அடிக்கடி பரீட்சை பார்த்தார்கள். தகப்பனுக்கு கீழ்படிய மறுத்தார்கள். தகப்பன் சுமந்துகொண்டு வந்ததை விசுவாசியாமல் மறந்து போனதினால் பரலோக நன்மையான கானானை காண முடியாமல் போனது.

 

எனக்கு அருமையானவர்களே, நம்முடைய தகப்பன் நம்மை நம் தாயின் கருவிலேயே தெரிந்துகொண்டு, சதாகாலமும் நம்மை சுமக்கின்றவர். நம்மை சுமக்கின்ற தேவனை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். ஆனால் இரவும், பகலும் தூங்காமல் நம்மை காத்து, எப்பொழுதும் நம்மை மறவாத தேவனாய், நம் நினைவாகவே இருக்கிறார். இப்படிப்பட்ட தேவனை நாம் காயப்படுத்தாமல், நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம்மை சுமக்கின்ற விதத்தை மறவாமல், நம்மை சுமந்து வழிநடத்திவருகின்ற தகப்பனுக்கு எப்பொழுதும் நாம் விசுவாசத்துடன் இருப்போம்.

- Sis. சிந்து

 

ஜெபக்குறிப்பு:-

VBS எடுக்கச் செல்லும் ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al