By Village Missionary Movement
Sunday, 18-May-2025இன்றைய தியானம்(Tamil) 18.05.2025 (Kids Special)
கேளுங்கள் கொடுக்கப்படும்
"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;..." - மத்தேயு7:7
எங்கும் சல சலவென பிள்ளைகளின் பேச்சு சத்தமும், கல கலவென சிரிப்பு சத்தமும், விளையாட்டு சத்தமும் பலமாய் கேட்டது. இந்த சத்தம் ஏதோ School Ground லிருந்து வருகிறது என்று நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை.
அது ஆதரவற்ற பிள்ளைகள் வாழும் தெரசா இல்லத்திலிருந்து வரும் சத்தம். இந்த ஆதரவற்றோர் காப்பகத்தை டேவிட் என்ற Uncle நடத்தி வந்தாங்க, இங்குள்ள பிள்ளைகளுக்கு பாடல் பாடுவது, கதை கேட்பது, என்றால் ரொம்ப பிடிக்கும். இந்த பிள்ளைகளை ஜெபத்தில் அந்த Uncle நடத்தி வந்தாங்க. இவர்களின் தேவைக்கான பணம் எதுவும் வெளிநாட்டிலிருந்து வரவில்லை. எல்லாம் விசுவாசத்தில்தான் இந்த காப்பகமே நடந்து வந்தது. உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் உங்கள் பெற்றோரிடம்தான் முதலில் கேட்பீர்கள் அப்படித்தானே! ஆனால் இங்குள்ள பிள்ளைகளுக்கு எதுவும் தேவையென்றால் இயேசப்பாவிடம்தான் கேட்பார்கள். பின்புதான் அந்த Uncleலிடம் கேட்பார்கள். அப்படித்தான் அவர்களை வளர்த்து வந்தார்கள்.
ஒருநாள் இந்த காப்பகத்தில் இரவு உணவிற்காக சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் தீர்ந்து போயிருச்சு. அந்நேரத்தில் அந்த Uncleலும் அங்கே இல்லை. எங்கு போன் செய்தாலும் கேஸ் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. இரவு மணி 8.45 ஆகிவிட்டது. பிள்ளைகள் Study முடித்து சாப்பிட வந்து விட்டார்கள். பார்த்தால் சாப்பாடே ஆகவில்லை. பிள்ளைகள் குட்டி பிள்ளைகளாக இருப்பதால் அவர்களால் பசியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது அந்த விடுதியில் காப்பாளராக இருக்கும் ஒரு அக்கா அவர்களிடம் நாம் அனைவரும் முழங்கால்படியிட்டு ஜெபிப்போம். எலியா தாத்தாவை காகம் கொண்டு போஷித்த இயேசப்பா நம்மையும் போஷிப்பார் என்று சொல்லி அவர்களை ஜெபிக்க வைத்தார்கள். பிள்ளைகளும் கருத்தாய் ஜெபித்தார்கள். ஜெபித்து முடித்து வெளியே பார்த்தால் என்ன ஆச்சரியம் ஒரு Uncle பெரிய கூடையோடு அந்த விடுதியின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். பின்பு Uncle அதிலிருந்த பொட்டலத்தை அங்கிருந்த அந்த அக்காவின் கையில் கொடுத்து இதில் சாப்பாடு இருக்கிறது சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள். அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தால் உள்ளே புரோட்டாவும், இட்லியும் இருந்தது. பிள்ளைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இயேசப்பா எங்கள் ஜெபத்திற்கு உடனே பதில் தந்து விட்டார் என்று சொல்லி இயேசப்பாவிற்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு மீதியானதையும் எடுக்க இயேசப்பா கிருபை செய்தார்.
குட்டி தம்பி-தங்கைகளா, பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அற்புதம் என்று, நீயும் எங்க வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டமாக இருக்கிறது. நல்ல ட்ரெஸ் கூட எனக்கு இல்லை என்று கவலைப்படுகிறாயா? நீயும் இந்த பிள்ளைகளைப் போல இயேசப்பாவிடம் கேள், உனக்கும் இயேசப்பா தருவாங்க. சரியா!
- Mrs . ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864