Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.05.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 17-May-2025

இன்றைய தியானம்(Tamil) 17.05.2025

 

பாதை சரியா?

 

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல..." - ஏசாயா 55:8

 

ஓவியர் ஒருவர் தன் வீட்டு மொட்டை மாடியில் ஓவியம் ஒன்று வரைந்து கொண்டிருந்தார். வரைந்து முடித்தவுடன் தன்னுடைய ஓவியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கும்படி சற்று பின்புறமாக சென்று பார்த்தார். அது மிகவும் அழகாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பின்னால் சென்று பார்ப்போம் என்று பின்னால் சென்று பார்த்தார். அது முன்பைவிட மிகவும் அழகாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தூரத்தில் சென்று பார்ப்போம் என்று தூரத்தில் சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த அவருடைய மனைவி அவருக்கு குடிப்பதற்காக காபி கொண்டு வந்தார். மாடிக்கு வந்த மனைவிக்கு ஓர் பேரதிர்ச்சி. அது என்னவென்றால் தன்னுடைய கணவர் ஓவியத்தை ரசிப்பதாக நினைத்து மதில் இல்லாத மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். மனைவி உடனே பதட்டப்படாமல் தன் கையில் இருந்த காபியை ஓவியத்தின் மீது ஊற்றி விட்டார். இதை பார்த்து கணவர் கோபத்தோடு மனைவியின் முன்வந்தார். பின்பு நடந்ததை புரிந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தார். அப்போது தான் தெரிந்தது நாம் இன்னும் ஒரு அடி பின் வைத்திருந்தால் கீழே விழுந்திருப்போம் என்று! 

 

இது போன்றுதான் ஆபத்து என்றே தெரியாமல் போதை வஸ்துகளை பயன்படுத்துவோர் ஏராளம். வெள்ளம் , சுனாமி போன்ற எச்சரிப்பை அரசு செய்தாலும், அதை துச்சமாக மதித்து செல்பி எடுத்து ஆபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மீம்ஸ், ரீல்ஸ், என்பதற்காக மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்வதும், ரயில் முன்னே செல்ஃபி எடுப்பதும், ஆபத்து என்பதை உணராமல் நாம் செய்யும் தவறுகள் தான் எத்தனை? கடவுளுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய இரட்சிப்பின் வழியில் அவர் சித்தம் செய்ய வேண்டும். நாம் ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், புறாவைப் போல கபடற்றவர்களுமாய், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும் நடந்து கொள்ளுங்கள் என்று மத்தேயு 10:16 இல் ஆண்டவர் நமக்கு அறிவுரை கூறுகிறார். பாம்பு பல நேரங்களில் தீமைக்கும், சாத்தானுக்கும் அடையாளமாக சொல்லப்பட்டாலும் இங்கே கடவுள் ஞானமாய் நடப்பதற்கு பாம்பை அடையாளம் காட்டுகிறார். பாம்பிற்கு காது கிடையாது, எனவே சிறிய அதிர்வுகளை கூட உணர்ந்து, எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். அதுபோல நாமும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம் இது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படும் காலம் இது. எனவே கடவுள் நமக்கு கொடுத்த இந்த காலத்தில் ஆவியானவரின் துணை கொண்டு ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைப்போம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். ( சங்கீதம் 146:5)

- M. எப்சிபா

 

ஜெபக்குறிப்பு:-

VBS ல் கற்றுக்கொடுக்கும் மனன வசனம் அவர்கள் உள்ளத்தில் நல்ல நிலத்தில் விழுந்த விதையாய் பலன் கொடுக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al