Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.05.2025
Share:

By Village Missionary Movement

Thursday, 15-May-2025

இன்றைய தியானம்(Tamil) 15.05.2025

 

பெருமை வேண்டாம்

 

"...தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்..." - யாக்கோபு 4:6

 

மூன்று நல்ல மனிதர்கள் மரித்து பரலோகம் சென்றனர். அங்கே கடவுளுக்கு அருகில் ஒரு நாற்காலிமாத்திரம் காலியாகயிருந்தது, இப்பொழுது "யார் அந்த நாற்காலியில் உட்கார்வது?" என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. முதல் நபர் தனது வாதத்தை கடவுளிடம் தெரிவித்தார். கடவுளே உமக்கு கோவில் கட்டுவதற்கு ஏராளமான பொருட்களை வாங்கி கொடுத்தேன், எனவே நான் தான் அந்த நாற்காலியில் உட்கார தகுதியானவன் என்றான். இரண்டாம் நபரோ, கடவுளே நான் தான் அந்த கோயிலை நிர்வாகம் பண்ணினேன், எனவே எனக்குத்தான்அந்த நாற்காலி என்றான். மூன்றாம் நபரோ மிகவும் அமைதியாக நின்று கொண்டிருந்தான். கடவுள் அவனிடம் கேட்டார், " ஏன் உனக்கு இந்த நாற்காலி வேண்டாமா?" என்று. அதற்கு அவன் ஆண்டவரே, உலகத்திலே உம்மை குறித்து நான் அதிகமாக எடுத்துரைக்கவில்லை. என்னால் இயன்ற சின்ன சின்ன உதவிகளை மட்டுமே மக்களுக்கு செய்துள்ளேன். எனவே இவர்களோடே போட்டிபோட நான் தகுதியற்றவன் என்றான். ஆனால் ஆண்டவர் அந்த நாற்காலியை மூன்றாம் மனிதனுக்கே கொடுத்தார். முதல் நபர் தனது வசதிவாய்ப்புகளை குறித்து பேசுகிறான். இரண்டாம் நபர் தனது திறமையை குறித்து பேசுகிறான். மூன்றாம் நபருக்கு இரண்டுமே இருந்தது. ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்ய வில்லை, என்னால் முடிந்ததை செய்தேன் என்று தாழ்மையோடு சொன்னான்.  

 

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவமக்களே! நீங்கள் எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாக செய்யுங்கள். நீங்கள் மனுஷர்கள் காணவேண்டும் என்று செய்யாமல், கர்த்தர் நம்மை கவனிக்கிறார் என்று செய்ய வேண்டும். இன்று அநேகர் மனுஷரின் பாராட்டுதலை பெறவேண்டும் என்று செய்கிறவர்களும் உண்டு. இன்று அநேக திருச்சபைகளுக்கு போவீர்களானால் டியுப்லைட், ஃபேன் போன்றவற்றில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது எதைக்குறிக்கிறது? அவர்களது செயல்பாடுகள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்கே! முதல் இரண்டு நபர்களும் தங்களது திறமைகளை குறித்து பேசுகிறார்கள், 

 

வேதம் சொல்கிறது, "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார்." நாம் சோர்ந்து போகாமல் தேவனுக்கென்று நற்கிரியைகளை தொடர்ந்து செய்வோம். ஏற்ற காலத்தில் நாம் தேவனுக்கென்று செய்கிற சகலவற்றின் பிரதிபலன்களும் நமக்கு வந்து சேரும். மனுஷர் காணும்படி காணிக்கையோ, உபவாசமோ, ஜெபமோ செய்ய கூடாது என்று இயேசு தமது மலைபிரசங்கத்தில் சொல்லியுள்ளார். பவுல் சொல்லும் போது தான் பெரிதாக ஆண்டவருக்கு ஒன்றும் செய்யவில்லை என்கிறார். ஊழியத்திலே தேவனுக்கென்று பெரிய, பெரிய காரியங்களை செய்தவர். அவரோ தன்னை தாழ்த்துகிறதை பார்க்கிறோம். நாம் எதைச் செய்தாலும் தேவனது ஒத்தாசையால்தான் செய்கிறோம். அதிலே நாம் மேன்மை பாராட்டக் கூடாது. ஆமென்! அல்லேலூயா!

- Pr. S.A. இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு;- 

பல புதிய கிராமங்களில் VBS ஊழியம் மூலம் சிறுவர்கள் கர்த்தரின் அன்பை அறிய ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet