Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.05.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 07-May-2025

இன்றைய தியானம்(Tamil) 07.05.2025

 

பாரத்தை வைத்துவிடு

 

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;... " - மத்தேயு 11:28

 

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். அவர் தன் கையில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, இந்த கண்ணாடி டம்ளரின் எடை எவ்வளவு இருக்கும் என கேட்டார். அதற்கு பல பதில்களை மாணவர்கள் கூறினார்கள். ஆனால் அந்த ஆசிரியர் என்ன கூறினார் தெரியுமா? அந்த டம்ளரை நான் எவ்வளவு நேரம் வைத்து இருக்கிறேனோ அதை பொறுத்தது என்று கூறினார். 5 நிமிஷம் வைத்து இருந்தால் அதிகமாக கஷ்டமாக இருக்காது. அரை மணி நேரம் வைத்து இருந்தால் கை வலிக்கும். 1 மணி நேரம் வைத்து இருந்தால் கை வலியோடு கை மரத்து போகும். கீழே வைத்தால் போதும் என தோன்றும். அது போல தான் நம் மனதில் கவலைகள், பாரங்கள் பெருகும் போது சுமக்க முடியாமல் தவிக்கிறோம். யாரிடமாவது சொல்லி ஆறுதல் பெற ஓடுகிறோம். மனிதர்கள் நம் கஷ்டங்களை கேட்பார்கள். சிலர் உதவி செய்ய நினைப்பார்கள் ஆனால் அவர்களால் முடியாது. சிலர் கேட்டு நமக்கு பின்னே சென்று மற்றவரிடம் சொல்லி சந்தோஷப்படுவார்கள். 

 

நமக்கு ஒரு தகப்பன் இருக்கிறார். அவர் நம் பாரங்களை தாம் சுமப்பதாக நம்மை தம்மிடம் அழைக்கிறார். அவர் யாரிடமும் சொல்லி மகிழ்கிறவர் அல்ல. நம்முடன் சேர்ந்து கண்ணீர் சிந்தும் நம் நல்ல நண்பன். அவரிடம் நம் பாரங்களை கொடுக்கும் போது அவர் தம் தோளில் அதை சுமந்து நமக்கு இளைப்பாறுதல் தரும் நல்ல தகப்பன். நம் பாரங்களை அவரிடம் கொடுத்து விட்டு, நாம் அவருக்கு நன்றி சொல்லி துதித்து கொண்டிருக்கும் போது அதற்கான தீர்வை அவரே பார்த்து கொள்வார்.  

  

வேதத்திலே அன்னாள் என்னும் ஒரு பெண் இருந்தாள் அவளுக்கோ குழந்தையில்லாதிருந்தது. இந்த தன் குறையை எண்ணி பாரப்பட்டு கண்ணீர் வடித்தாள். அவளது கணவர் ஆறுதல்படுத்தினாலும் ஆறுதல் அடையாதிருந்தாள். ஒரு நாள் தேவாலயத்திற்குச் சென்ற போது துக்கம் தொண்டையை அடைத்தவளாய் சொல்ல வார்த்தைகளின்றி தேவனிடத்தில் தன் இருதயத்திலுள்ள பாரத்தை எல்லாம் ஊற்றி விட்டாள். அதன்பின்பு அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை. கர்த்தர் அவள் ஜெபத்தை கேட்டு குழந்தை பாக்கியத்தை அருளினார். 

 

ஆகவே பிரியமானவர்களே, நாமும் நம் இருதயத்தில் உள்ள பாரங்கள், கவலைகள், கஷ்டங்களை நம் தகப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் ஒப்படைத்து விட்டு துக்கமாக இல்லாமல் தேவனை துதிக்கும் போது நற்பலன்களைக் காண்போம். இந்த நிமிடத்திலிருந்து செய்வோமா?

- Mrs. ஷீலா ஜான்

 

ஜெபக்குறிப்பு: 

நம்மிடம் VBS புத்தகங்களை வாங்கி சென்றவர்கள் அதை கிராம சிறுவர்களை செப்பனிட பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş holiganbet güncel giriş holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş