Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.05.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 04-May-2025

இன்றைய தியானம்(Tamil) 04.05.2025 (Kids Special)

 

உள்ளதைக் கொடு 

 

"...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரிந்தியர் 9:7

 

என்அன்புச் செல்ல பிள்ளைகளே! Leave நாட்கள் ரொம்ப ஜாலியா இருக்குதா? school கிடையாது, home work இல்லை, அதுவும் காலையில் எழும்பி படிக்கவும் தேவையில்லை. என்ன குட்டீஸ்! Leave நாட்களை பிரயோஜனப்படுத்திக்கொள்ள VBS இருக்குதானே. யாரும் miss பண்ணிடாம attend பண்ணனும். நம்ம Village tv யிலும் 5 days VBS இருக்குது பார்க்க மறக்காதீங்க. உங்க friends க்கெல்லாம் சொல்லுங்க. O.k இன்றைக்கு ஒரு story கேட்கலாமா?

    

ரோஜர் என்ற குட்டி பையன் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தான். கோலிக்குண்டு விளையாடுவதும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எப்பொழுதும் அவன் கையில் பம்பரமும், கோலிக்குண்டும் இருக்கும். விளையாடிக்கொண்டே ஆலயத்திற்குச் சென்றான். அங்கே ஆலயம் கட்டுவதற்காக பணம் சேகரிக்க வேண்டும் என்று போதகர் சொன்னபோது, எல்லாரும் காணிக்கை பையில் பணத்தை போட்டார்கள், செக் கொடுத்தார்கள், G-Pay பண்ணினார்கள். குட்டி பையன் ரோஜர்க்கு கொடுக்க ஆசை. ஆனால் பணம் இல்லையே என்ன செய்வதென்று தன் பாக்கெட்டில் பார்த்தான். பம்பரமும், கோலிக்குண்டும் தான் இருந்தது. அதை அப்படியே காணிக்கை பையில் போட்டுவிட்டான். பணத்தை எண்ணும் போது இது என்ன பம்பரம்... கோலிக்குண்டை கொடுத்தால் அதை வைத்து என்ன செய்ய முடியும் என சிலர் திட்டினார்கள். இதையெல்லாம் கவனித்த போதகர் பம்பரத்திற்கும், கோலிக்குண்டுக்கும் பதிலாக 10,000 ரூபாய் பணத்தை காணிக்கையாக கொடுத்தார்கள். அந்த சிறுவன் ரோஜர் உள்ளத்தில் தன்னிடம் இருந்ததை கொடுக்க நினைத்த நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டார். ஆலயம் கட்டுவதற்கு அடித்தளம் போட மூலைக்கல் வைப்பாங்க. அந்த கல் ஓரத்தில் பம்பரத்தையும், கோலிகுண்டையும் வைத்து விட்டு போனார் போதகர்.  

 

சில வருடங்களில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி Church அழகாக கட்டி முடிக்கப்பட்டது. பல வருடங்கள் கழித்து நன்றாகப் படித்து உயர்ந்த நிலைக்கு வந்த ஒருவர்தான் சிறுவயதில் பம்பரமும், கோலிக் குண்டும் காணிக்கை பையில் போட்ட சிறு பையன் என்பதை போதகர் கண்டு ஆச்சரியப்பட்டார். அவனுடைய பார்வையில் அற்பமாய் தெரிந்திருக்கலாம். தன்னிடம் உள்ளதை கொடுத்த ரோஜர், ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்தான். ஆண்டவர் அவன் கொடுத்ததை மறக்காமல் ஆசீர்வதித்தார். 

 

அருமையான குட்டிச்செல்லங்களே, எல்லா உதவியும் செய்கின்ற இயேசப்பாவுக்கு நாம் எப்படி கொடுக்கிறோம் என்று யோசித்து பாருங்க. பணம் காசு இல்லாத ரோஜர் தன்னிடம் உள்ளதை கொடுத்ததைப்போல நீங்களும் உங்க நேரத்தை, தாலந்தை, உங்க உள்ளத்தை Jesus க்கு கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துங்க. O.k குட்டீஸ் Bye.

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al