By Village Missionary Movement
Monday, 28-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 28.04.2025
ஜெபத்தை செப்பனிடுங்கள்
"...நீங்கள் ஜெபம்பண்ணும் போது அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்;..." - மத்தேயு 6:7
ஒருவர் தன் மனைவியோடு கண்தெரியாத பெற்றோருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. குடியிருக்க வீடும் கிடையாது. ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்குள் சென்ற போது அவர் முன் தேவதை தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரே ஒரு வரம் தான் என்றது. குழந்தை, வீடு, பெற்றோருக்கு கண்பார்வை எதைக் கேட்பது என யோசித்து பின், எங்கள் வீட்டு மாடியில் என் பெற்றோர் நின்று கொண்டு, வீட்டு முற்றத்தில் விளையாடும் எங்கள் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்றான். ஒரே வரத்தில் மூன்றும் நிறைவேற்றப்பட்டது.
இது ஒரு வேடிக்கை கதை தான். அதே போல் நாமும் ஜெபத்தில் வீண் வார்த்தைகளை அலப்பாமல் ஞானமாய் ஜெபிக்க வேண்டும் என்கிறார். சாலொமோன் தேவனிடத்தில் ஜனங்களை நடத்திச் செல்ல ஞானத்தைக் கேட்கிறார். நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். நாம் வேண்டிக் கொள்வதற்கு அதிகமாய் செய்கிறவர். அதனால் கேளாத ஐசுவரியத்தையும், ஞானத்தையும் கொடுக்கிறார். அதே போல எலியா கருத்தாய் ஜெபிக்கிறார். மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. நம் காரியங்களை தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக அதிக வார்த்தை ஜாலங்களை பயன்படுத்த வேண்டியதில்லை. நம் நிலை, நினைவுகளை அவர் அறிந்து வைத்திருக்கிறார். கருத்தாய் ஜெபிக்கும் போது தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல ஜெபத்திற்கு நினைப்பதற்கும் மேலான காரியங்களை செய்து பதிலளிக்கிறவர் என்றும் நாம் பார்க்கிறோம். எலியா வானத்திலிருந்து அக்கினியை இறக்க மூன்று மணி நேரங்கள் ஜெபிக்க வில்லை. சில நிமிடங்கள் தான் ஜெபிக்கிறார். அக்கினி வந்து பலிபீடத்திலுள்ளதையும், சுற்றியுள்ள நீரையும் நக்கிப் போட்டது. அதாவது பட்சித்தது.
இன்றைக்கும் நம் ஜெபம் எப்படியிருக்கிறது? சற்று சிந்திப்போம். நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக வீண் வார்த்தைகளால் அலப்பிக் கொண்டு இருக்கிறோமா? சுருக்கமாய், ஞானமாய், கருத்தாய் ஜெபிப்போம். அன்னாள் தேவனுக்கென்று பிள்ளை கேட்டு சாமுவேலைப் பெற்றார்கள். அது போல் தேவனுக்கு நன்மை உண்டாக, தேவ ராஜ்யம் கட்டப்படுவதற்கு ஏதுவாக நம் ஜெபங்கள் இருக்கட்டும். ஜெப கூட்டம் நடத்த வீட்டைத் தாரும் எனக் கேட்டு, நாம் பெற்ற வீட்டில் மாதம் ஒரு முறையாவது அருகிலுள்ளோரோடு கூடி ஜெபிப்போம். சுவிசேஷம் சொல்ல இரு சக்கர வாகனம் வேண்டும் என கேட்டு, பெற்ற வாகனத்தில் வாரம் ஒரு முறை அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று சுவிசேஷம் அறிவிப்போம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. ஐடா கிங் டேவிட்
ஜெபக்குறிப்பு:-
நமது பணித்தளங்களில் தேவையுள்ள ஒரு லட்சம் பேருக்கு வேதாகமங்கள் வழங்க தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864