By Village Missionary Movement
Saturday, 26-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 26.04.2025
தயவு
"அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" - பிலிப்பியர் 2:4
ஆஸ்திரேலியா நாட்டில் வில்லியம் பேஸ்ட்ரோ என்னும் வாலிபர் ஒரு ஓட்டப்பந்தயவீரர். விளையாட்டுத் துறையில், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவர். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை பயிற்சி எடுப்பதற்கான ஷூ வாங்குவதற்கு கூட வசதி இல்லாமல் இருந்தது. அநேக ஓட்டப்பந்தய பயிற்சியாளரை சந்தித்து உதவி கேட்டும் யாரும் உதவ முன் வரவில்லை, தயவும் காட்டவில்லை. ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சியாளர்களை சந்தித்து உதவி கேட்டுக்கொண்டேயிருந்தார். இறுதியில் ஒரு பயிற்சியாளர் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். வில்லியம் மாரத்தான் போட்டியில் பங்கு பெற்று சிறப்பாக ஓடி முதலாவதாக வெற்றி பெற்றார். கிடைத்த பரிசை தனக்கு தயவு காட்டி உதவிய பயிற்சியாளரிடம் கொடுத்து நன்றி கூறினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் அநேகருக்கு தயவு பாராட்டினார். அநேகருடைய வியாதியை சொஸ்தமாக்கினார். முடவர்களை நடக்கச் செய்தார். குருடர்களை பார்வையடையச் செய்தார். தீராத வியாதிகளையும் சொஸ்தப்படுத்தி பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார். சிலுவை மரணத்திற்கு போகப் போகும் நாட்களில், சீஷர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத் தொட்டு அவனை சொஸ்தப்படுத்தினார். நம்முடைய இருதயமும் இயேசு கிறிஸ்துவைப் போல மனதுருக்கத்தால் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதிலிருந்தே அன்பு, கருணை, கரிசனை, தயவு, இரக்கம் எல்லாம் ஊற்றாய் புறப்படும்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கனி. இயேசுவானவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்பவராகவே சுற்றித் திரிந்தார். வசனம் இப்படியாக கூறுகிறது எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும் என்று. எனவே நாம் பிறர் மீது எந்த அளவு தயவு பாராட்டுகிறோமோ அந்த அளவிற்கு இயேசு நமக்கும் தயவு பாராட்டுவார். நாம் பெற்ற இரட்சிப்பு அவருடைய தயவினால் கிடைத்தது. அவருடைய தயவைப் பெற்ற நாம் மற்றவர்களுக்கும் தயை செய்ய மறக்கக் கூடாது. அப்பொழுது தேவனிடமிருந்து தாராளமாக தயவையும் பெறுவோம்.
- Mrs. ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம்கள், வாலிபர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864