By Village Missionary Movement
Monday, 21-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 21.04.2025
கொஞ்சத்தில் உண்மை
"...கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,..." - மத்தேயு 25:21
எனக்கு தெரிந்த ஒரு சகோதரன் தன் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை, என்றாலும் ஒரு கைத்தொழிலைத் தெரிந்து வைத்திருந்தார். இந்த கைத்தொழில் அவருடைய வாழ்க்கை முன்னேற்றமடையவும், வருமானத்தை ஈட்டவும் ஏதுவாக இருந்தது. பின்னர் சென்னையிலுள்ள ஒரு கம்பெனியில் லேபராக பணிசெய்து வந்தார். சில வருடங்களில் பணி உயர்வு பெற்றார். இவருடன் வேலை செய்த நபர்கள் படித்தவர்களாயிருந்தாலும், அதிகம் படிக்காத இவர் சில வருடங்களில் பணி உயர்வு பெற காரணம், இவரிடமிருந்த உண்மை! இவருடைய M.D இந்த சகோதரனின் வேலையில் உண்மை இருப்பதினாலும், எந்த ஒரு பிழையில்லாமல் வேலை செய்வதினாலும் புதிய Site Project இல் இந்த சகோதரனை Site engineer ஆக நியமிக்க தீர்மானித்தார். இந்த சகோதரனின் வாழ்க்கையை கவனித்தால் அவர் Engineering படிக்கவில்லை, degree முடிக்கவில்லை ஆனாலும் கைகளில் சுத்தம், வேலையில் உண்மை, கடின உழைப்பு இவையெல்லாம் இவருடைய வாழ்க்கைத் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.
பழைய ஏற்பாட்டு காலத்தில் தன்னுடைய எஜமானுக்கு உண்மையாயிருந்த யோசேப்பு என்ற வாலிபனை நாம் அறிவோம். யோசேப்பு எகிப்துக்கு அடிமையாக கொண்டுச் செல்லப்பட்டார். ஆனாலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும் அவன் எஜமான் கண்டு, அவனைத் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரராக்கினான்.
பிரியமானவர்களே! உங்கள் குடும்பம் சிறியதோ பெரியதோ, சிறிய தொழிலோ, பெரிய தொழிலோ, வீட்டு வேலையோ எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கிற வேலையில் உண்மை, கடின உழைப்பில் சிறந்தவர்களாக மாறுவோம். மேலே கூறின அந்த சகோதரன் இன்றும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார். காரணம் தேவன் மீதுள்ள நம்பிக்கை, அவரின் உண்மை. நீங்களும் தேவன் உங்களை வைத்துள்ள இடத்தில், கொடுத்துள்ள பொறுப்பில் உண்மையாயிருப்பீர்களென்றால் கட்டாயம் ஒருநாள் தேவன் உங்களையும் அதிகாரியாக மாற்றுவார். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். அல்லேலுயா!
- Mrs. நான்சி அதிசயமணி
ஜெபக்குறிப்பு:
வட மாநில ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864