By Village Missionary Movement
Saturday, 19-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 19.04.2025
சவாலான இலக்குகள்!!
"...நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா..." - 1 சாமுவேல் 14:1
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஆகாயவிமானம், ரைட்சகோதரர்கள் என்றெல்லாம் பாடம் நடத்தினார். அப்போது சில மாணவர்கள் குறும்புத்தனமாக, "சார் நாங்கள் எப்போது விமானத்தில் பறப்பது?" என்று கேட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தலைமையாசிரியர் பதில் சொல்ல முடியாமல் யோசித்தார். ஆனால் இதையே சவாலாக எடுத்துக்கொண்டு தனது நண்பர்கள், ஊரில் உள்ளவர்கள் என அநேகரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி பணம் சேகரித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் 5-ம் வகுப்பு மாணவ மாணவிகள் 20 பேரையும் மதுரையிலிருந்து சென்னை வரை விமானத்தில் கூட்டிச் சென்றார். ஒரு அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக இப்படி ஒரு சவாலான காரியத்தை செய்த தலைமையாசிரியரை அநேகர் பாராட்டினர்.
1 சாமுவேல் 14-ம் அதிகாரத்தில் யோனத்தானின் சவாலான தலைமைத்துவத்தையும், சவாலான இலக்குகளையும் பார்க்கிறோம். அதாவது ஒரே ஒரு ஆயுததாரியான வாலிபன் மட்டுமே தன்னோடு இருந்தாலும் எதிரிகளின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சவாலிட்டு அழைக்கின்றார். நடந்தது என்ன? யோனத்தானும், ஆயுததாரியும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டார்கள்.
அன்பானவர்களே! உலகிலுள்ள அநேக தலைமைத்துவங்கள், பெயர் மற்றும் புகழை மையமாகக் கொண்டுள்ளது. அதற்கு கீழே அநேக வாலிபர்களும் போகிறார்கள். சவாலான தலைமைத்துவமும் இல்லை, சவாலான இலக்குகளும் இல்லை. கிராம மிஷனெரி இயக்கத்தின் சவாலான இலக்குகளுக்காக, தலைமைத்துவத்திற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். பிறர் எடுக்கத் தயங்கும் சவாலான இலக்குகளை, நம் ஊழியம் கையில் எடுக்க தேவன் கிருபை பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்கள் தோறும் சுவிசேஷப் பணி, வாலிபர் முகாம்கள், கிராம ஊழியர்கள் மாநாடு என ஒவ்வொரு இலக்குகளும் சவாலானவை! இப்படிப்பட்ட சவாலான தலைமைத்துவமும், இலக்குகளும் உடைய இந்த ஊழியத்தில் நீங்களும் ஒரு பங்காளராக இணைந்து செயல்பட அழைக்கிறோம்! சகோதரர் டேவிட் கணேசன் அவர்கள் கூறும் காரியம் என்னவென்றால் "எங்கள் ஊழியத்தில் தனி நபர்கள் அல்ல, எங்களது இலக்குகள்தான் ஹீரோ". ஆம், தரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள். உயர்ந்த இலக்குகள் இருக்கும் போது நமது செயலும் முன்னோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
VBS புத்தகங்கள் அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864