Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.04.2025
Share:

By Village Missionary Movement

Thursday, 17-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 17.04.2025

 

அவர் பெருக

 

"அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" - யோவான் 3:30

 

இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்திற்கு செல்லும் முந்தைய நாளில், தம்முடைய சீஷர்களோடு இரவு போஜனம் பண்ணும், "The last supper" என்று சொல்லப்படும் படத்தை வரைந்தவர் மிகவும் அழகாக அதை வரைந்து முடித்து, அந்த படத்தைக் குறித்த கருத்துக்களை தன் நண்பர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த அழகிய படத்தை பார்த்து விட்டு, அதை அலங்கரித்திருந்த, அழகிய வண்ண விளக்கை புகழ்ந்து " என்ன ஒரு அருமையான விளக்கு" என்று பாராட்டினார்கள். மற்ற ஓவியர்களாயிருந்தால் புகழ்ந்தவுடன் மயங்கி போயிருப்பார்கள். ஆனால், இவரோ உடனே அந்த விளக்கை அந்த படத்திலிருந்து நீக்கி விட்டார். அவருடைய எண்ணமெல்லாம், எல்லாருடைய கவனமும் எஜமானாகிய கிறிஸ்துவின் மேல் தான் இருக்க வேண்டும், அவரைத் தவிர வேறு எதுவும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக, மேலானதாக தெரியக் கூடாது என்பதுதான். அதனால் இந்நாள் வரை அந்தப் படத்தில் விளக்கு இல்லாமல் இருப்பதையே காணலாம்.  

 

புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானனைக் குறித்து வாசிக்கிறோம். இவர் எந்தவிதமான அற்புதத்தையும், அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தைரியமாய் அறிவித்தவர். அவர் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவோ, முன்னிலைபடுத்தவோ இல்லை. அவருடைய பிரசங்கத்தில் வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தப்படுத்துகிறவராகவும் வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமுமாகவே வாழ்ந்து முடித்தார். ஆம், நமது வாழ்விலும் கிறிஸ்துவே பிரதானமாக இருக்கவேண்டும். 

 

பிரியமானவர்களே, இன்றும் எத்தனையோ மிஷனெரிகள், ஊழியர்கள், நன்கு படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள், தங்கள் படிப்பையும், வேலைகளையும், உயர்ந்த செல்வாக்குகளையும் தள்ளிவிட்டு, கர்த்தருக்காக தங்களை அர்ப்பணித்து, இன்று வரை தங்கள் பெயர், புகழ் வெளிவராமல் அவருக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெளிச்சத்தில் நாமும் இன்றளவும் களிகூர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆம், தேவனுடைய காரியத்தில் அவர் மகிமைப்பட வேண்டும் நாம் மறைந்து கொள்ள வேண்டும். நம்மை மறைத்து எல்லாவற்றிலும் அவரையே உயர்த்துவோம்! கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக வாழுவோம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

VBS ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet