Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.04.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 15-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 15.04.2025

 

தகப்பனை நோக்கி

 

"நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்;..." - சங்கீதம் 71: 3

 

வழக்கம் போல அன்றும் சாம் தன் நான்கு வயது மகள் சாராவுக்கு வேதத்திலுள்ள கதையை சொல்ல ஆரம்பித்தான். இப்படி தினந்தோறும் கதை கேட்டுக் கொண்டே சாரா தூங்கி விடுவாள். அன்றும் அப்படித்தான் ; யோசேப்பின் கதையைச் சொல்லிகிட்டே வந்தவன் " யோசேப்பை ரொம்பவுமே வெறுத்த அண்ணன்மார் ஒரு நாள் அவன் தொலைவிலே வருவதைக் கண்டு, எப்படியாகிலும் இன்று அவனைக் கொன்று போட்டு, குழியிலே போட்டு விட வேண்டும், என்று தீர்மானித்தபடியே, யோசேப்பை எடுத்து, ஒரு குழியிலே போட்டுட்டாங்க. அந்த குழி தண்ணீர் இல்லாத வெறுங்குழியாயிருந்தது, என்று சொல்லும் போதே சாராவின் முகம் வாடிப்போனது. ஓரு விநாடிக்கு பிறகு சாரா சொன்னாள், Daddy யோசேப்பு உடனே அவங்க அப்பாவுக்கு ஏன் போன் போட்டு சொல்லலை? என்றாள். சாம் கண்கள் விரிய, புருவம் உயர்த்தி, தன் மகளின் மதிநுட்பத்தைக் கண்டு வியந்து போனான். மகள் சாராவின் இந்த கேள்வி நூற்றுக்கு நூறு உண்மையல்லவா! எந்த பிள்ளையும் தனக்கு ஆபத்து வரும் போது, தன் தகப்பனைச் சத்தமிட்டு அழைக்க உரிமை பெற்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா!

 

நாம் எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் அவரை அழைக்க நமக்கு உரிமை தந்திருக்கிறார். சங் 50: 15 ல் "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" என்று எழுதப்பட்டுள்ளதை அறிந்தது உண்டா! பிலி.4:6 ல் நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை, ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்ற வார்த்தை நமக்கு இயேசு இருக்கிறார், நாம் அநாதையில்லை என்ற செய்தி முகம் மலரச் செய்கிறதாயிருக்கிறதல்லவா?

 

சாராவின் அற்புதமான கேள்வியை ஒரு விசை நினைவுக்கு கொண்டு வருவீர்களானால் உங்கள் நெருக்கத்திலே இக்கட்டிலே தவிப்பிலே கைவிடப்பட்ட நிலையை இயேசப்பாவிற்கு முழங்காலில் நின்று தெரியப்படுத்துவீர்களா?

 

ஆம், அன்பானவர்களே, இயேசுவால் கூடாதது எதுவுமில்லை அவரை நம்புகிறவர்களுக்கு எல்லாம் கூடும். கேளுங்கள், விசுவாசத்தோடு கேளுங்கள். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து பின் அவரிடம் உங்கள் தேவையை கேளுங்கள். உங்களை தாழ்மைப்படுத்தி கேளுங்கள். கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னவரிடம் கேளுங்கள். பரம தகப்பனிடம் உரிமையாய் கேளுங்கள். நிச்சயமாகவே உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஏனென்றால் அவர் எப்போதும் நாம் வந்தடையத்தக்கக் கன்மலையாயிருக்கிறார்.

- Mrs. எமீமாள் சௌந்தர்ராஜன்

 

ஜெபக்குறிப்பு:- 

Child care Child திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் படிப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al