Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13.04.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 13-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 13.04.2025 (Kids Special)

 

தோல்வி இல்லையே

 

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” - பிலிப்பியர் 4:19 

 

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு Sports னா ரொம்ப பிடிக்குமா? அப்படி Sports ல ஆர்வமாயிருந்து வெற்றி பெற்ற கதை தான் கேட்கப் போறோம். வாங்க கதைக்குள்ள போவோமா? 

 

அருண்னு ஒரு தம்பி இருந்தான். அவனுக்கு விளையாட்டுனா ரொம்ப ஆர்வம். அதிலும் (ஜூடோ) குத்து சண்டை ரொம்ப பிடிக்கும். அதை அதிகமாக பார்த்து, வீட்டில் பேசிக்கொண்டே இருந்தான். உடனே அம்மா அவன் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி குத்து சண்டை கற்றுக் கொடுக்க ஒரு பயிற்சியாளரிடம் அவனை சேர்த்தனர். அவனும் மிகவும் சந்தோஷமாக பயிற்சிக்கு சென்றான். ஒரு மாதம் சென்றதும் பயிற்சியாளர் இனி ஒவ்வொரு Tricks ம் கற்றுத் தரப் போகிறேன் என்றார். மறுநாள் ஆர்வமாக பயிற்சிக்கு கிளம்பினான். காரில் வரும் போது விபத்துக்குள்ளாகி தன் இடது கையை இழந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினான் அருண். இனி என்னால் குத்து சண்டை விளையாட முடியாது என அழுது கொண்டே இருந்தான். பயிற்சிக்கு செல்லவில்லை, உடனே பயிற்சியாளர் ஏன் அருண் பயிற்சிக்கு வரவில்லை என விசாரித்து அறிந்து கொண்ட அவர், அருண் வீட்டிற்கு வந்தார். பயிற்சியாளரைப் பார்த்ததும் அருண் மடமடவென அழ ஆரம்பித்தான். பின்பு அழுது கொண்டே எனக்கு ஒரு கை தான், நான் எப்படி குத்து சண்டை கற்க முடியும் என்றான். உடனே இயேசு கிறிஸ்துவை அறிந்த பயிற்சியாளர் நம் குறைவையெல்லாம் நிறைவாக்குகிற கர்த்தர் நம்மோடிருக்கிறார். ஜெபித்து பயிற்சிக்கு வா, நீ விரும்பியபடி உன்னை சிறந்த வீரனாக மாற்றுகிறேன் என்றார். என்னை நம்பா விட்டாலும் தேவனை நம்பி வா என்றார்.   

 

அருண் அப்படியானால் என்னால் குத்து சண்டை விளையாட முடியுமா? என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டான். நிறைவாக்குகிற கர்த்தரால் முடியும் நாளையிலிருந்து பயிற்சிக்கு வா என்றார். உடனே அருண் அம்மா, கண்டிப்பா நாளைக்கு அருண் பயிற்சிக்கு வருவான் என்றார்கள். பயிற்சியாளர் சென்று விட்டார். மறுநாள் அருண் தயங்கியபடி பயிற்சிக்கு வந்தான். மாணவர்கள் எல்லாரும் வியந்து பார்த்தனர். பயிற்சியாளர் அவனை தனியே ஒரு இடத்தில் வைத்து பயிற்சி கொடுத்தார். நாட்கள் செல்ல செல்ல அருண் உற்சாகமாக பயிற்சி பெற்று வந்தான். பயிற்சியாளர் ஒரு குத்து முறையை கற்று கொடுத்தார். அருணும் கற்றுக் கொண்டான். பின்பு ஒரு நாள் அருணை போட்டிக்கு அனுப்புவதாகக் கூறினார். அருண் நான் ஒரு குத்து முறை தான் கற்றுள்ளேன் நான் எப்படி போட்டிக்கு? என்றான். பயிற்சியாளர் அதெல்லாம் ஒன்றுமில்லை தைரியமாக போ என்றார். அருணும் ஒத்துக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான். எப்படி என அருண் குருவிடம் கேட்டான். குரு இது (ஜூடோ) குத்துசண்டையிலே கடினமான பயிற்சி இதை சமாளிக்க உன் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. அதனால் உன்னை சமாளிக்க முடியாமல் தோற்று விடுவர் என்றார். மேலும் தேவனை நம்பி அவரைப் பற்றிக் கொண்டதால் குறைவை நிறைவாய் மாற்றினார். உன் குறைவே உனக்கு வெற்றியைத் தந்தது என்றார். 

 

குட்டீஸ்! நீங்களும் என்னிடம் வெற்றி பெறுமளவு ஞானம் இல்லை, திறமை இல்லை என எண்ணுகிறீர்களா? குறைவான ஞானத்தை, திறமையை அவரை நம்பி அவரிடம் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet