By Village Missionary Movement
Monday, 07-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 07.04.2025
அலங்கம் செப்பனிடப்பட
"...நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்..." - நெகேமியா 2:17
ஒரு வீட்டிற்கு சுற்றுச்சுவர் அவசியம். அதேப்போல ஒரு பட்டணத்திற்கு அலங்கமே பாதுகாப்பை கொடுக்க கூடியது. எதிரிகள் எளிதில் உள்ளே வராமலும், தாக்காமலும், நஷ்டங்கள் வராமலுமிருக்க அலங்கம் உதவும்.
அலங்கம் அவ்வளவு முக்கியமானது! இவ்வளவு முக்கியமான எருசலேமின் அலங்கம் இடிப்பட்டது என்றும், வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும் கேள்விப்பட்ட நெகேமியா, அழுது, துக்கித்து, உபவாசித்து மன்றாடி பரலோகத்தின் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினார். நெகேமியா ஜெபித்தபோது தேவாதி தேவனின் தயவும், ராஜாவின் தயவும் கிடைத்தது. அப்பொழுது நெகேமியா தமது ஜனங்களை நோக்கி இடிபட்டுக் கிடக்கும் அலங்கத்தை செப்பனிடுவதற்கு 'எழுந்து கட்டுவோம் வாருங்கள்' என்று அறைகூவல் விடுத்தார். அவரவர் தங்கள், தங்கள் வீடுகளுக்கு நேராகயிருந்த அலங்கத்தின் பகுதியை செப்பனிட்டு கட்டினார்கள். நெகேமியா எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக அலங்கம் கட்டப்பட்டது. இதை தடுத்து நிறுத்த சில சத்துருக்கள் எத்தனித்தார்கள். அவர்களது முயற்சி வீணாய் போயிற்று. காரணம் தேவனது கரம் நெகேமியாவோடும், அவரது ஜனங்களோடும் இருந்தது.
எனக்கருமையான தேவமக்களே! உங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் அலங்கம் இடிக்கப்பட்டு காணப்படுகிறதோ? அது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையோ, குடும்ப வாழ்க்கையோ, ஊழிய வாழ்க்கையோ? எது இடிக்கப்பட்டதாக காணப்படுகிறது? இன்றே தேவாதி தேவனின் தயவையும், உதவியையும் நாடுங்கள். தேவனே! இது எங்களால் கூடாதது தான். ஆனால் உம்மால் சரிபடுத்த கூடும். அலங்கமில்லாத பட்டணம் போல காணப்படுகிறேன். நீரே எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அலங்கத்தை செப்பனிட வேண்டும் என்று ஜெபிப்போம். ஆம், வேதம் இப்படியாக நம்மை எச்சரிக்கிறது" பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்'' என்று. எனவே இடிபட்டு கிடக்கிற நமது காரியங்கள் செப்பனிடப்பட மிகுந்த விழிப்போடு ஒவ்வொரு நாளும் காணப்படுவோம். செப்பனிடப்பட்ட வாழ்க்கை அநேகருக்கு பிரயோஜனமாய் மாறும். அல்லேலுயா!
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரி அறைகள் கட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து தாங்கக்கூடிய பங்காளர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864