By Village Missionary Movement
Saturday, 05-Apr-2025இன்றைய தியானம்(Tamil) 05.04.2025
தேன் சிட்டு
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;..." - மாற்கு 14:8
Nobel பரிசு பெற்ற ஒரு பெண்ணிடம், நிருபர் கேட்டார், நீங்கள் சமூதாயத்திற்காக செய்கின்ற காரியத்தின் மூலமாக இந்த உலகத்தை மாற்ற முடியுமா என்று. அதற்கு அந்த பெண் ஒரு கதை சொன்னார். ஒரு பெரிய காடு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த பறவைகளும், விலங்குகளும் பக்கத்திலுள்ள நதி ஓரத்திற்குச் சென்று விட்டன. ஆனால் பறவைகளில் மிகவும் சிறியதான ஒரு தேன்சிட்டு தன் வாயில் நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அந்த தீ பிடித்து எரியும் காட்டில் ஊற்றியது. இதனை பார்த்த மற்ற பறவைகள் நீ ஊற்றுகிற தண்ணீரில் தான் இந்த காட்டுத் தீ அணையப் போகிறது ஹா! ஹா! என கேலி செய்து சிரித்தன. அதற்கு அந்த தேன்சிட்டு சொன்னது, "எனக்கும் தெரியும் அணைக்க முடியாது என்று! ஆனால் இத்தனை நாள் இந்த காடு பல நன்மைகளை எனக்கு செய்திருக்கிறது. எனவே என்னால் முடிந்த உதவியை நான் இந்த காட்டிற்கும் செய்ய வேண்டுமே" என்றது. இந்த கதையை கூறி, அதுபோல என்னால் இந்த உலகத்தை மாற்ற முடியாது ஆனால், இந்த உலகத்திற்கு என்னால் முடிந்த காரியங்களை செய்வேன் என்று கூறினார் அப்பெண்மணி.
வேதத்திலே எருசலேம் அலங்கம் இடிபட்டது என்று கேள்வி பட்டவுடன் நெகேமியா மிகவும் துக்கித்து, உபவாசித்து ஜெபம் பண்ணி பின்பு ராஜாவிடம் பேசுகிறார். அவருக்கு தெரியும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று. ஆனால் அவர் இருதயம் எருசலேமிற்காய் துடித்தது. தேவன் கூட இருந்தார். அதை கட்ட பிரயாசப்பட்டார். தேவன் அதற்கு உதவி செய்தார். 52 நாட்களில் அலங்கம் கட்டிமுடிக்கப்பட்டது. n
எனக்கு அன்பானவர்களே! இன்று நம் மனநிலை என்ன? நம் தேசத்தில் உள்ள வாலிபர்களின் அவலநிலை குறித்து கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்காக நமது பிரயாசம் என்ன? நானும் என் குடும்பமும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டோம். அது போதும் என்று இருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவிடம் இருந்து நன்மைகளையும், இரட்சிப்பையும் இலவசமாய் பெற்ற நாம், இயேசுவுக்காய் என்ன செய்ய போகிறோம்? நம் சுயபலத்தால் முயற்சியால் உலகத்தை மாற்ற முடியாது. ஆனால் தேன்சிட்டு போல் நாமும் நம்மால் இயன்ற காரியத்தை செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
மிஷன் ஸ்கூல் கட்டுவதற்கு அனுமதி பெற, அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864