Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.04.2025
Share:

By Village Missionary Movement

Friday, 04-Apr-2025

இன்றைய தியானம்(Tamil) 04.04.2025

 

பிதாவின் சித்தம் செய்தல்

 

"...பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்..." - மத்தேயு 7:21

 

இன்றைய வேதபகுதியிலுள்ள வசனங்கள் நமக்கு 3 காரியங்களை மிக முக்கியமாக வலியுறுத்துகிறது. 1. மற்றவர்கள் நம்மை எவ்விதம் நடத்த விரும்புகிறோமோ, அவ்விதமாய் நாம் மற்றவர்களை நடத்த வேண்டும். 2. ஜீவனுக்குப் போகிற நெருக்கமான வாசலை கண்டுபடித்து, அதன் வழியாக செல்ல வேண்டும். 3. நல்ல கனிகளை கொடுத்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும் பரலோகவாசிகளாக வாழ வேண்டும். 

 

"போலிகார்ப்" என்ற 86 வயது நிரம்பியவர் ஆதி திருச்சபையின் தந்தைகளில் ஒருவராக அழைக்கப்பட்டார். இவரை ரோம அரசாங்கம் கைது செய்து கிறிஸ்துவை மறுதலிக்கும்படி வற்புறுத்தியது. அவர் மறுதலியாமல் விசுவாசத்தில் உறுதியாயிருப்பதை அறிந்து, தண்டனைகளை அதிகரித்தது. ஆனாலும் அவர் எதைக் குறித்தும் வருத்தப்படாமல், மகிழ்வுடன் தண்டனையை நிறைவேற்றும்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் கடைசியாக சொன்ன வார்த்தை,'' எனக்கு வயது 86 ஆகிறது, இதுவரை இயேசு என்னை இனிமையாக நடத்தி வந்தார். எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை, நான் கடைசி மூச்சு இருக்கும் வரை அவரை மறுதலிக்க மாட்டேன். மரண தண்டனையை இன்பத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார். "போலிகார்ப்" அவர்கள், கிறிஸ்துவுக்கென்று நல்ல கனி கொடுத்து, பிதாவின் சித்தப்படி வாழ்ந்து தன் ஓட்டத்தை ஜெயமாக ஓடி முடித்தார்". 

 

ஒரு வேளை அவர் மறுதலித்திருந்தால், அவருக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைத்திருக்கும், பின் சந்ததிக்கும் பலன் உண்டாயிருக்கும். ஆனால் அவர் இடுக்கமான வாசலையே தெரிந்துகொண்டு, பரலோக பாக்கியத்தை கண்டடைந்தார். தன் பின் சந்ததிக்கும், இந்த மகத்தான பாதையைக் காட்டிச் சென்றுள்ளார். " நாம் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்". 

 

போலிகார்ப் 86 வயது வரை, யாரையும் புண்படுத்தாமல், மற்றவர்கள் ஒருவரையொருவர் கன்னியத்தோடும், மதிப்போடும் நடந்துகொள்ள, தன் சொல்லிலும், செயலிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார். அநேகரை வாழவைத்தார். நாமும் கனம் பண்ணுகிறதிலே முந்திக் கொள்வோம், தாழ்மையை உடையவர்களாக வாழ்வோம், நாம் வாழ்ந்து சுகித்திருக்க நினைப்பது போல, மற்றவர்களையும் வாழச் செய்வோம். நாம் பரலோக பாக்கியம் அடைந்தால் மட்டும் போதாது, மற்றவர்களையும் பரலோக பாக்கியம் அடைய அழைத்துச் செல்வோம். "ஆத்துமாக்களே நமது பொக்கிஷம்"

 

நமது கிரியைகளுக்கேற்ற பலன் இங்கு அல்ல, அங்கு கிடைக்க பிதாவின் சித்தத்தையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம். ஆமென்!.

- Rev. D.செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மிஷனெரி பயிற்சி மையம் கட்டுவதற்கான நிலங்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking