By Village Missionary Movement
Monday, 17-May-2021இன்றைய தியானம்(Tamil) 17-05-2021
உமக்கு மறைவாக
“...நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக...” – உபாகமம் 27:10
ஒரு அம்மாவுக்கு 3 பிள்ளைகள் இருந்தார்கள், மூன்று பிள்ளைகளிடமும் ஆளுக்கு ஒரு ஆப்பிள் கொடுத்து, “நீங்கள் மூவரும் இதனை யாரும், பார்க்காதபடி சாப்பிட வேண்டும். சாயங்காலம் எப்படி சாப்பிட்டீங்க என்று என்னிடம் வந்து சொல்ல வேண்டும்” என்று அம்மா சொன்னார்கள். ஆப்பிள் என்றவுடன் மூவரும் சந்தோஷமாக வாங்கி சென்றனர். மூத்தவன் தோட்டத்திற்கு சென்று சுற்றிச் சுற்றி பார்த்தான் யாருமே இல்லை. எனவே ஆப்பிளை சாப்பிட்டான். 2 வது மகள் Store room உள் சென்று, யாரும் நம்மை இங்கு பார்க்க முடியாது என்று நினைத்து சாப்பிட்டாள். கடைசி தம்பியால் ஒரு இடமும் கண்டுபிடிக்க முடியவில்லை. சாயங்காலம் மூவரும் அம்மாவிடம் வந்தனர். முதல் இரண்டுபேரும் தாங்கள் சாப்பிட்ட விதம் பற்றி சொன்னார்கள் கடைகுட்டி சொன்னான், “அம்மா, எல்லா இடத்திலேயும் இயேசப்பா என் கூடவே இருக்கிறாங்க. அதனால இயேசப்பாவுக்கு மறைவா என்னால் ஆப்பிள் சாப்பிடவே முடியவில்லை” என்றான்.
இந்த சிறுவனுக்கு இருந்த இந்த உணர்வு, ஆதாம் தொடங்கி இன்றுவரை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே இல்லாமல் போனது. “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்” என்று கர்த்தர் கேட்டார். ஆதாம் எங்கே இருக்க வேண்டியவன்? பகலில் குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலாவ வேண்டியவன்! அவனுடைய நிலை என்ன? எபி. 2:7ன் படி மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டவன். அவரது கரத்தின் கிரியைகள் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவன். சகலமும் அவன் பாதத்துக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. ஆனால் “தேவரீருடைய சத்தத்தைக் கேட்டு பயந்து ஒளித்துக்கொண்டேன்” என்கின்றான். எத்தனை பரிதாபம்! இவ்வாறு தேவனுடைய கட்டளையை மீறி பயந்து, தேவனை விட்டு விலகி விடுவதுதான் பெரிய பாவம்.
பிரியமானவர்களே! தேவன் நமக்காக வைத்துள்ள மேன்மை எவ்வளவு பெரியது என்று நீங்கள் உணர்ந்ததுண்டா? இன்று கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம் என்று எபே. 2:7ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை பெரிய சிலாக்கியம் பாருங்கள். இவ்வளவு மேன்மைகளை பெற்ற நாம் அவைகளையெல்லாம் உணராமல் ஆதாம், ஏவாளைப் போல உலகத்தின் ஆசையில், கண்களின் இச்சையில் விருப்பமுற்று தேவனை விட்டு தூரமாய் போய்க் கொண்டிருக்கிறோமா? அப்படியென்றால் மனம் வருந்துவோம், பாவத்திற்காக துக்கப்பட்டு, அவருடன் ஒப்புரவாகி எப்போதும் அவரோடு கூட இருப்போம். அல்லேலூயா.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
சட்டீஸ்கர், ஆந்திரா, ஒடிஸா ஆகிய மாநிலங்களிலிருந்து வேதாகமக் கல்லூரிக்கு பயில வந்திருக்கும் மாணவர்கள் உற்சாகமாக பங்கு பெற, ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250