By Village Missionary Movement
Sunday, 16-May-2021இன்றைய தியானம்(Tamil) 16-05-2021 (Kids Special)
நண்பனாய் வந்தார் Jesus
“நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” – யோவான் 15:14
Hai குட்டீஸ்! உங்களுக்கு Friends ன்னா ரொம்ப பிடிக்கும்தானே! Friends கூட ஜாலியா விளையாடலாம், பேசலாம், சிரிக்கலாம் இப்படி நேரம் போறதே தெரியாதில்லையா? School -ல்ல, தெருவில், பக்கத்து வீடு, எதிர் வீடு இப்படி நிறைய நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள்தானே! அவங்க எல்லாரும் இயேசப்பாவை அறிந்து கொள்ள நீங்க என்ன செய்திருக்கிறீர்கள். ராஜேஸ்வரி என்ன செய்தான்னு கதை கேட்கலாமா?
ஒரு கிராமத்துல கோமதின்னு ஒரு பாப்பா இருந்தா. அவகூட விளையாட யாருமே இல்ல. பக்கத்து வீட்டு திவ்யாவை விளையாட கூப்பிடலாமேன்னு நினைச்சு போனாள், திவ்யா சொன்னா, “எங்க அம்மா கடைக்கு போயிருக்கிறாங்க. என்னோட குட்டி தம்பியை பார்த்துக்க சொல்லியிருக்காங்க நான் விளையாட வர முடியாது” ன்னு சொல்லிட்டா. சரி, அடுத்த தெருவுல இருக்கிற மாரீஸ்வரி வீட்டுக்கு போவோம் என்று நினைத்து கோமதி அங்கு போனாள். நீங்களும் தனியா இருந்தா போர் அடிக்குதுன்னு Friendsஐ தேடி போறீங்களா? உங்களைப் போலத்தான் கோமதிக்கு போர் அடிச்சது. சரி கோமதி யார் வீட்டுக்குப் போனா சொல்லுங்க பார்ப்போம். ஓ....சரியா சொன்னீங்க.
மாரீஸ்வரி வீட்டிற்கு போனதும், “என்கூட விளையாட வர்றியா”ன்னு கேட்டா கோமதி. “அப்பா அம்மா டவுன் போறாங்க நானும் கூட போறே” ன்னு சொல்லி அழகான புது ட்ரெஸ் போட்டு கிளம்பினாள். கோமதி ரொம்ப கவலையோடு வீட்டுக்கு நடந்து போனாள். எதிரில் வந்த ராஜேஸ்வரி, “ஏ....கோமதி எங்க போற இன்றைக்கு சுபா அக்கா பாட்டு, கதை சொல்லி தர வந்திருக்காங்க Games எல்லாம் நடத்துவாங்க செம ஜாலியா இருக்கும். வர்றியா” ன்னு கேட்டதும் சந்தோஷத்தோடு போனாள் கோமதி. கதையெல்லாம் சொல்லி கொடுத்தாங்க. “உங்க best friend Jesus தான். எப்பவும் உங்க கூடவே இருப்பார். யாரெல்லாம் இயேசப்பாவுக்கு Friends ஆக ஆசைப்படுறீங்க” ன்னு சுபா அக்கா கேட்டதும், கோமதி முதல் ஆளா கையை உயர்த்தினாள். தன் வாழ்க்கையை இயேசப்பாவுக்கு அர்ப்பணித்தாள். புதுசா நிறையா Friends ஐ பார்த்து அவர்களோடு பேசினது கோமதிக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்தது. சொல்லித் தந்த பாட்டை பாடிக் கொண்டே ஜாலியாக நடந்து போனாள் கோமதி. விளையாட யாருமேயில்லை என்று கவலைப்பட்ட கோமதிக்கு நிறைய Friends கிடைச்சாங்க. அதுமட்டுமா Jesus அவளோட best friend ஆக வந்துட்டாங்க. இதற்கெல்லாம் யார் காரணம்னு நினைக்கிறீங்க குட்டீஸ். ராஜேஸ்வரிதானே.
தான் மட்டும் Sunday class போனா போதாது. தன்னோட கிராமத்தில் இருக்கிற எல்லா பிள்ளைகளும் இயேசுவை அறியணும்னு ஆசைப்பட்டு ஒவ்வொரு வீடா போயி கூப்பிட்டா. Jesus தான் நமக்கெல்லாம் நல்ல friend ன்னு அறிமுகப்படுத்த ராஜேஸ்வரியும் உதவிசெய்தாள் தானே! நீங்களும் Jesus-ஐ அறிமுகப்படுத்துகிற நல்ல friend ஆக இருக்கணும். சரியா.
- A. பியூலா
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250