Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21.03.2025
Share:

By Village Missionary Movement

Friday, 21-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 21.03.2025

 

பாதையை செப்பனிடுவோம்

 

"சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது" - சங்கீதம் 136:13 

 

இரண்டு நபர்கள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனார்கள். ஒருவர் சைக்கிளின் டயர் வட்டமாகவும், மற்றொருவரின் சைக்கிள் டயர் சதுர வடிவாகவும் இருந்தது. சதுர வடிவம் டயர் கொண்ட சைக்கிளை அந்த நபரால் இயக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் அதனை ஓட்ட முடியவில்லை. ஆனால் வட்ட வடிவ டயர் கொண்ட சைக்கிளின் நபரால் எளிதாக, எவ்விதமான கடின முயற்சியுமின்றி ஓட்ட முடிந்தது. அடுத்து இருவருக்கும் ஒரு யோசனை வந்து நிலப்பரப்பை மாற்றினார்கள். உயரம் நிறைந்த படியில் சதுர வடிவில் சைக்கிள் கொண்ட நபரால், எளிதில் சைக்கிளை ஓட்ட முடிந்தது. ஆனால் வட்ட வடிவ டயர் கொண்டவரால் முற்றிலுமாக இயக்க முடியாமல் போனது.

          

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானுக்கு செல்லும் போது வழியில் அவர்களுக்கு சமுத்திரம் வந்தது. சமுத்திரம் இரண்டாகப் பிளப்பது என்பது அற்புத காரியம். ஆனால் கர்த்தர் மோசேயைக் கொண்டு சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தார். சமுத்திரம் வெட்டாந்தரையாக மாறினது. இதில் இஸ்ரவேல் ஜனங்கள் நடந்து சென்றனர். இது இயற்கைக்கு மேற்பட்ட அற்புதமான காரியம். சமுத்திரம் இரண்டாக பிரியுமா, மனித அறிவுக்கு எட்டாத காரியம். அதில் ஜனங்கள் நடந்து செல்வார்களா என்பதெல்லாம் சாத்தியமற்றது. ஆனால் நம்முடைய பரம தேவனால் சமுத்திரையான பாதையையும் வெட்டாந்தரையாக்கி நம்மை வழி நடத்திச் செல்ல முடியும்.    

 

பிரியமானவர்களே! பாருங்கள் அநேகருடைய வாழ்வில் இப்படி தான் நடக்கிறது. பலர் தங்களுக்கு சாதகமான துறை என்னவென்று தெரியாமல் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கே ஆண்டவரிடத்தில் எனக்காக வைத்திருக்கிற வழி என்ன என்று கேளுங்கள் உங்களுக்கென்று அவர் ஒரு தனித்துவமான பாதையை வைத்திருக்கிறார். ஆண்டவர் சொல்லுகிறதை செய்தால், நாம் அறியாத வழியிலே நம்மை நடத்தி, நமக்குத் தெரியாத பாதையில் நம்மை அழைத்துக் கொண்டு செல்வார். அவர் காட்டும் பாதையில் நாம் செல்லும்போது நாம் எதிர்பார்த்திராத நன்மையை நாம் கண்டடைவோம். நாம் நம்முடைய பாதையை அவருக்கு முன்பாக செப்பனிட்டு, அவர் காட்டுகிற திசையில் சென்று, பரமனின் ராஜ்யத்தை சென்றடைவோம்.

- Bro. முரளி கிதியோன்

 

ஜெபக்குறிப்பு:-

ஓய்வு பெற்ற மிஷனெரிகள் தங்குவதற்கான இல்லங்கள் கட்டப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al