Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.03.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 18-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 18.03.2025

 

நன்மைக்கு ஞானிகள் தீமைக்கு பேதைகள்

 

"...நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" - ரோமர் 16:19

 

சாலைகளில் சில இடங்களில் விபத்துப் பகுதி என்றும், கடற்கரை, ஆற்றங்கரைகளில் ஆழமான பள்ளங்கள், ஆபத்தான நீரோட்டங்கள், வழுக்கும் பாறைகள், சொருகு மணல் உள்ள இடங்கள் என்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். மருந்து பாட்டில்களில் அளவு, தூக்கம் உண்டாக்கும் மருந்து போன்ற எச்சரிக்கை சீட்டுகள் ஒட்டப்பட்டிருக்கும். சில குப்பிகளின் மேல் விஷம் என்ற சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். இந்த எச்சரிக்கைகளை கவனித்து செயல்படவில்லையென்றால் அவற்றில் நமக்கு கேடுண்டாக்கும் விளைவுகள் நிச்சயம் உண்டு.  

 

பரிசுத்த வேதாகமும் இத்தகைய எச்சரிக்கைகளால் நிரம்பியுள்ளது. வேத வசனங்கள் ஆவிக்குரிய அபாயங்களை நமக்கு உணர்த்துகின்றன. நாம் செய்யும் காரியங்கள் தேவனோடு நமக்குள்ள உறவைப் பாதித்து, கெடுக்கிறது என்றால் நாம் நித்திய ஜீவனை இழந்து போகக்கூடும். இதுபோன்ற அநேக காரியங்களை குறித்த எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் பாவம் என்றே உணராத அநேக காரியங்களைக் குறித்த எச்சரிக்கைகள் வேதத்தில் உள்ளன. புகைப்பிடித்தல், சினிமா பார்த்தல் பாவம் என்று எங்கே வேதம் கூறுகிறது என்று சிலர் விதண்டாவாதம் செய்கின்றனர். நம்முடைய சரீரத்தையும், ஆத்துமாவையும் கெடுக்கிற எந்த காரியத்தையும் செய்பவர்களை மதிகேடர் என்று வேதம் அழைக்கிறது. இச்சை, கிறிஸ்துவை பரீட்சை பார்த்தல், முறுமுறுத்தல் போன்றவை தேவ கோபத்திற்குள்ளாக்கும் காரியங்கள் என்று 1கொரி. 10 : 5 - 11 வசனங்கள் கூறுகின்றன. விவாகரத்து, சத்தியம் பண்ணுதல், நாள் நட்சத்திரம் பார்த்தல், சகுனம் பார்த்தல், லாட்டரி சீட்டு வாங்குதல், சூதாட்டம், பெருமை, வைராக்கியம், பகை, மன்னியாமை போன்ற காரியங்களுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல. சகோதரனை மூடனே என்று அழைப்பதும், நியாயமில்லாமல் கோபித்தலும், வீணன் என்று சொல்வதெல்லாம் கூட நியாயத்தீர்ப்புக்கு ஏதுவான பாவங்களாக வேதம் எச்சரிக்கிறது.

 

எனவே பிரியமானவர்களே! வேதத்தை கவனமாக வாசித்து, தியானித்து, எது நன்மை, எது தீமை என்பதை நாம் அறிந்து கொண்டால்தான் நாம் மேற்கண்ட வசனத்தின்படி நன்மைக்கு ஞானிகளாகவும், தீமைக்கு பேதைகளாகவும் இருக்க முடியும். இன்றே செய்வோமா? 

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு:- 

சென்னையில் நடைபெறும் அற்புதமாலை கூட்டங்களுக்காக ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al