Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  15-05-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 15-May-2021

இன்றைய தியானம்(Tamil)  15-05-2021

விதை முளைக்கும் 

“...நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.” – 1கொரி. 3:7

ஜெப அப்போஸ்தலன் என அழைக்கப்படும் ஜான்ஹைடு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில், தன் நண்பரோடு ஊழியத்தை தொடங்கினார். இருவரும் இரவு பகலாக ஜெபித்து இடைவிடாமல் மக்களை சந்தித்து தேவனுடைய வார்த்தைகளை கூறினார்கள். எந்த பலனும் இல்லை “ஏன் இப்படி” என்று இருவரும் சோர்ந்து போயினர். நாம் சரியில்லையோ? நாம் ஊழியம் செய்யும் முறை சரியில்லையோ என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். இதுவே கடைசி நாள் ஊழியம் என்று கூறி பாடல் ஒன்றைப் பாடி ஜனங்களுக்கு வசனத்தை கூறினார். சிறிது நேரத்தில் வாலிபன் ஒருவன் அப்பாடல் தன்னை தொட்டதாக கூறினான். அடுத்தடுத்து ஒவ்வொருவராக முன்வந்து, அன்றைய தினமே ஞானஸ்நானம் எடுக்க ஒப்புக்கொடுத்தனர். ஜான்ஹைடு மிகவும் ஆச்சரியப்பட்டார். 

அப்போஸ்தலனாகிய பவுல் நன்றாக வசன விதைகளை விதைக்க தெரிந்தவர். வசன விதைகளை எல்லா இடங்களிலேயும், எல்லா மனிதர்களின் இருதயங்களிலும் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் விதைத்தார். ஆனால், தேவனே விளையச் செய்கிறவர் என்பதில் அவர் நம்பிக்கையாயிருந்தார். ஆகவேதான் நான் நட்டினேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார் என கூறுகிறார். இந்த சத்தியம் தெரிந்ததினாலே பவுல் சோர்ந்துபோகாமல் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினார். 

இதை வாசிக்கின்ற ஊழிய நண்பர்களே! நீங்கள் ஒரு சபையை நடத்திக் கொண்டிருக்கலாம் அல்லது சுவிசேஷ ஊழியம் செய்யலாம். வருடக்கணக்காக ஊழியம் செய்தும் ஆத்தும அறுவடையை காண முடியவில்லையே, அசைவே இல்லையே என சோர்ந்து போயிருக்கலாம். விதைப்பதுதான் நம் வேலை. ஜெபத்தோடு தேவன் உங்களுக்குக் கொடுத்த வேலையை விசுவாசத்தோடு செய்து கொண்டேயிருங்கள். தேவன் நம்மை உற்சாகப்படுத்தும்படி அவ்வப்போது ஒரு சில அறுவடையைக் காட்டுவார். அதற்காக நாம் செய்த மற்ற ஊழியங்கள் எல்லாம் வீண் என்று ஒருபோதும் நாம் எண்ணிவிடக்கூடாது. தண்ணீரின் மேல் ஆகாரத்தைப் போட்டிருக்கிறோம் அநேக நாட்களுக்குப் பின் அதன் பலனைக் காண்போம் என்பது உறுதி. அல்லேலூயா! 
-    Mrs. ஜோதி ஆனந்த் 

ஜெபக்குறிப்பு:
புதியதாக இணைந்துள்ள மிஷனெரிகளை தேவன் ஊழியத்தில் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet