Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.03.2025
Share:

By Village Missionary Movement

Tuesday, 04-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 04.03.2025

 

பணஆசை வேண்டாம்

 

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;..." - 1 தீமோ. 6:10

 

ஒரு தொழில் அதிபர் அநேகரை வேலைக்காரர்களாக வைத்திருந்தார். அதில் ஒருவருக்கு காசாளர் பொறுப்பை கொடுத்திருந்தார். அவருடைய தொழில் நாளுக்கு நாள் விருத்தியடைந்ததால் பணப்புழக்கம் அதிகரித்தது. காசாளர் கையில் அதிகமான பணப்புழக்கம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கையாடல் பண்ண ஆரம்பித்தார். நாளடைவில் இது தொழில் அதிபருக்கு தெரிய வந்தது. அவர் அவனிடம் எதுவும் விசாரிக்காமல் அவனை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். வேலையிழந்த காசாளர் கொஞ்ச நாட்கள் திருட்டு பணத்தை வைத்து வாழ்ந்தார். நாட்கள் கடக்க, கடக்க பணத்தேவை அதிகமாகி, கடனை வாங்கி சமாளித்தார் . கடைசியாக கடன் அதிகரிக்கவே அதைக் கட்ட வழி தெரியாமல் தற்கொலை செய்து மரித்துப் போனார்.

         

மேலே கண்ட அந்த காசாளர் நல்ல வேலையில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தான். எதுவரை இன்னும் இன்னும் பணம் வேண்டும் என்று எண்ணாமல் இருந்தானோ அதுவரை அவனுக்கு பிரச்சனை வரவில்லை. எப்பொழுது அவனுக்குள் பண ஆசை வந்ததோ அப்பொழுதே அவனுடைய வாழ்க்கையில் இருள்சூழ ஆரம்பித்தது. அவனுடைய பண ஆசை அவனை பரிதாபத்திற்குள் கொண்டு போய் விட்டது. இதைப்போலத்தான் வேதத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு காசாளர் இருந்தான். அவன் பெயர் யூதாஸ் காரியோத். இவனிடம் காணிக்கைப் பையை கொடுத்து வைத்திருந்தார்கள். இயேசுவோடு சுகமாய், நலமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். எதற்கும் கஷ்டமோ, தேவையோ இல்லாமல் சமாதானத்தோடு நாட்கள் கடந்தது. எப்பொழுது அவனுக்கு பண ஆசை வந்ததோ தன் குருவையே காட்டிக் கொடுத்து பணம் சம்பாதித்தான். அவன் சம்பாதித்த பணம் அவனுக்கு உதவியாக இருந்ததா? என்றால் இல்லை. மாறாக நான் தவறாக இப்படி செய்து விட்டேனே என்று நான்று கொண்டு (தற்கொலை செய்து) மரித்துப் போனான். பண ஆசை எல்லாவிதமான தீமைகளுக்கும் வேராய் இருக்கிறது என்று வசனம் கூறுகிறது. பண ஆசை நம்மை உருவக்குத்தும். அநேக விதமான வேதனைகளைக் கொண்டு வரும்.  

 

வேதத்தில் அனனியா, சப்பீராள் என்ற தம்பதியர் உண்டு. இவர்கள் ஊழியத்திற்கு நிலத்தை விற்றுக் கொடுக்க தீர்மானித்தார்கள், விற்கவும் செய்தார்கள். ஆனால் நிலம் விற்று பணம் கைக்கு வந்த பின்பு மனைவிக்கு தெரிய ஒரு பங்கை கணவன் எடுத்து வைக்கிறான். இது எதைக் குறிக்கிறது பண ஆசையை தான் குறிக்கிறது . பண ஆசையினால் அவர்கள் வஞ்சித்து வைத்தது மாத்திரமல்ல, பொய் சொல்லவும் செய்தார்கள். அதனால் வந்த முடிவு ஐயோ பரிதாபம். இருவரும் ஒருமிக்க மரித்துப் போனார்கள். பணம் தேவையான ஒன்றே! பணம் எல்லாவற்றிற்கும் உதவும், ஆனால் பண ஆசை மாத்திரம் ஒரு நாளும் நம்மிடம் வந்து விடக்கூடாது. அது தீமையான அநேகமானவற்றை கொண்டு வந்து விடும். எச்சரிக்கை! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

- Pr. எஸ்.ஏ. இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய கிளை அலுவலகங்களில் செய்யப்படும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al