Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.03.2025
Share:

By Village Missionary Movement

Monday, 03-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 03.03.2025

 

வசனமே காப்பாற்றும்

 

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" - சங். 119:11

 

இரண்டு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடந்தது. அநேகர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்கள். அப்போரில் சுடப்பட்ட ஒருவன் மயக்கத்திலிருந்து தெளிவடைந்து தான் உயிரோடே இருப்பதை அறிந்தான். தன் மேல் குண்டு எந்த பகுதியில் பட்டிருக்கிறது என்று தடவிப் பார்த்தான். சட்டையில் பாக்கெட் பகுதியில் குண்டு பட்டிருந்தது. அவன் உயிரோடிருந்ததற்கு காரணம் அவன் பாக்கெட்டிலிருந்த அந்த புதிய ஏற்பாடு. அந்த புதிய ஏற்பாட்டில் குண்டு பட்டதேயல்லாமல் அதை துளை போட்டுக்கொண்டு சரீரத்தில் போக முடியவில்லை. அதனால் அந்த மனிதன் பிழைத்தான்.

         

தேவ பிள்ளைகளே, சங்கீதக்காரன் சொல்கிறான், நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி உம்முடைய வாக்கை (வசனம்) என் இருதயத்தில் வைத்து வைத்தேன். வசனம் யாருடைய இருதயத்தில் இருக்கிறதோ, அவர்களை பாவம் என்ற "அழிக்கும் குண்டு" ஒன்றும் செய்ய முடியாது. யோசேப்பை எடுத்துக் கொள்ளுங்கள், யோசேப்பு தன்னை பரிசுத்த குறைச்சலாக்க வந்த எஜமானின் மனைவியைப் பார்த்து நான் இவ்வளவு பெரிய பொல்லாப்பை தேவனுக்கு விரோதமாக செய்வது எப்படி? என்று அதற்கு விலகி ஓடி தன்னை காத்துக் கொண்டான். அந்த குண்டானது காயப்படுத்தி அவனை சிறைச்சாலைக்குள் அனுப்பியது அவனது உயிரை அதனால் வாங்க முடியவில்லை.

          

பிரியமான தேவ ஜனமே! எந்த அளவிற்கு வேதம் படிக்கிறோமோ, செவியால் கேட்கிறோமோ அவைகளை நமது இருதயமாகிய லாக்கரில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் அந்த வசனம் நம்மை பாவம் செய்ய விடாதபடி தடுத்து நமது ஆவிக்குரிய ஜீவியத்தை காப்பாற்றும். இருதயத்தில் வசனமில்லாதிருந்தால் நிச்சயமாகவே பாவம் என்ற குண்டு நம்மைக் கொன்று போட்டு விடும். சங்கீதக்காரன் 37:31 ல் "அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை" எனச் சொல்கிறான். யாரெல்லாம் வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, கண்டிப்பாக அவர்கள் தங்கள் ஆத்துமாவை தீமையினின்று காத்துக் கொள்வார்கள். வேதம் அதிகமாக படிப்போம், கேட்போம், அவைகளை இருதயமாகிய லாக்கரில் கொண்டு போய் சேமிப்பு பண்ணுவோம். நமது ஆவிக்குரிய ஜீவியத்தை காத்துக் கொள்வோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

- Mrs. ஹெப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய கிளை அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al