Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.03.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 02-Mar-2025

இன்றைய தியானம்(Tamil) 02.03.2025 (Kids Special)

 

வேடன் வருவான்

 

"...உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" - 1 பேதுரு 5:8

 

ஹலோ குட்டி செல்லங்களே! நீங்க எல்லாரும் கொக்கு பார்த்திருக்கீங்களா? ஆமா, குளத்துல, ஆத்துல மீன்களை சாப்பிடுவதற்கு வரும். கொக்கு எவ்வளவு அழகா சூப்பரா இருக்கும் பார்த்திருக்கீங்களா? மீனைப் பார்த்தா அப்படியே கேட்ச் பண்ணி புடிச்சு, லபக் லபக் ன்னு சாப்பிடும் அப்படித்தானே. ஆமா, இன்னைக்கு ஒரு கொக்கு கதை கேட்கலாமா?

 

ஒரு அழகான ஆற்றங்கரையில நிறைய கொக்குகள் வாழ்ந்து வந்துச்சு. அந்த கொக்கை பிடிக்கிறதுக்காக ஒரு வேடன் வந்தான். இந்த கொக்கையெல்லாம் நம்ம வேட்டையாடனும்னு நெனச்சு துப்பாக்கியோட ஒரு நாள் மேல பார்த்து சுட்டான். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட ஒரு சில கொக்குகள் வேகமா பறந்து போயிடுச்சு. ஆனா மீன் மேல ஆசைப்பட்ட கொக்குகள் ஏதோ ஆபத்து வரப்போகுது என்று தெரிந்தும் அசால்ட்டாக இருந்தது. அது எல்லாம் அந்த வேடனுக்கு பலியாயிடுச்சு. ஒரு சில கொக்குகள் நல்ல மீன் வேற கிடைச்சிருக்கு தப்பிக்க வேற செய்யணுமே அப்படின்னு ரெண்டு நினைவுகளோட இருந்த கொக்குகள் அடிபட்டு கீழ விழுந்துருச்சு. வேடனுடைய வேலைக்காரன் செத்துப்போன கொக்குகளை எல்லாம் பொருக்கி பொருக்கி ஒரு பையில போட்டான். அப்ப அந்த வேடன் என்ன சொன்னான் தெரியுமா? செத்துப்போனத விடு, அது நமக்குத்தான், அடிபட்டு பாதி உயிரோடு இருக்கிற அந்த கொக்குகளை பிடி. அதுதான் பறந்து போக ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கு அப்படின்னு சொன்னான். ஜாக்கிரதையா இருந்த கொக்குகள் எல்லாம் பறந்து தப்பிச்சு போயிடுச்சு.

 

இதேபோலதான் ஒவ்வொரு நாளும் அந்த வேடன் கொக்குகளை வேட்டையாடினான் பாருங்க. குட்டிச் செல்லங்களே! பிசாசு நம்மை அவனுடைய வலையில் சிக்க வைக்கிறதுக்கு அநேக தவறுகளை செய்ய வைப்பான். ஜாக்கிரதையா இருக்கும் போது நம்மளும் தப்பித்துக் கொள்ளலாம். கொஞ்ச நேரம் தானே செல்போன் பார்க்கிறேன். சின்ன பொய் தானே சொல்றேன். கெட்ட வார்த்தை தானே பேசுகிறேன் அப்படினு அசால்டா இருந்தோம்னா பிசாசுடைய வலையில சிக்கி அவனுக்கு அடிமையாக மாறிடுவோம்.

        

பாத்தீங்களா குட்டீஸ், பாவத்தின் பயங்கரத்தை நாம் உணர்ந்தால் பறந்து பிசாசின் கைக்குத் தப்பித்து விடலாம். பரிசுத்தத்தைக் குறித்த அக்கறையின்றி பாவத்திலே இருப்பவர்களைக் குறித்து பிசாசுக்கு கவலையில்லை. அவர்கள் செத்துப்போன கொக்குபோல! ஆனால் பாவம் என்று தெரிந்தும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி வாழ்பவர்கள்தான் அவன் குறி. ஆகவே ஜாக்கிரதையா இருக்கணும்னா இயேசப்பாகிட்ட பிரேயர் பண்ணனும். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியணும் O.k.வா. அப்படியே இருந்த இடத்துல கண்களை மூடி ஜெபம் பண்ணுவோமா. அன்புள்ள இயேசப்பா, சாத்தானுடைய வலையில் சிக்காம ஜாக்கிரதையா இருக்க எனக்கு கிருபை தாங்கப்பா. உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய கூடிய நல்ல இருதயத்தை எனக்குத் தாங்க இயேசப்பா, ஆமென்.

- Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş