Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.02.2025
Share:

By Village Missionary Movement

Friday, 28-Feb-2025

இன்றைய தியானம்(Tamil) 28.02.2025

 

எறும்பு

 

"சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்" - நீதிமொழிகள் 6:6

 

சின்ன எறும்பு தானே என்று எண்ணி அதை நாம் நசுக்கி கொன்று விடுகிறோம். அந்த சின்ன எறும்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் பல உண்டு. சுறுசுறுப்பு, உழைப்பு, முன்கூட்டியே சேகரித்து சேமித்து வைத்தல், வரிசையில் செல்லும் ஒழுங்கு என பல உண்டு. ஆனால் அவைகளெல்லாவற்றிற்கும் அதன் உடலமைப்பும் ஒரு காரணம். இன்று அதன் உடலமைப்பிலிருந்து சில காரியங்களைக் கற்றுக் கொள்வோம்.

         

இதயம் கிடையாது: முதலாவது எறும்பிற்கு இதயம், குழாய் அமைப்பிலே தான் இருக்கும். நம்மைப் போல தனியாக இருதயம் கிடையாது. அதாவது தன் சுய சித்தம், விருப்பம் இல்லாமல் தேவன் தன்னை உண்டாக்கின சித்தத்தின்படியே ஓடுகிறது. நாமும் நம் சுய யோசனையின் படி நடவாமல், "உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" என்ற வேத வசனத்தின் படி அவர் கரத்தில் நம்மை அர்ப்பணிப்போம். அவர் ஆலோசனைப்படி நடப்போமானால் தேவ திட்டத்தை விட்டு வழி விலக வேண்டிய நிலை வராது. நம் முதல் அன்பும், முழு அன்பும் அவருக்கு செலுத்துவோம். அவர் நம்மேல் வைத்த திட்டம் பெரியது. அவர் திட்டத்தில் வாழுவோம்.

      

காதுகள் கிடையாது: எறும்பின் தலையில் இரு உணர்வு கொம்புகளிருக்கும், அதனால் அதிர்வுகளைக் கொண்டே அவைகள் ஒலியை அறிகின்றன. நாமும் கூட பிறர் பேசும் புகழ்ச்சியான, இகழ்ச்சியான காரியங்களுக்கு செவிகொடாமல் சென்றால் இன்னும் நம் ஓட்டத்தில் துரிதமாக ஓட முடியும். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். (சங்கீதம் 55:22) என்ற வசனத்தின் படி நம்மை ஆதரிக்கிற, உயர்த்துகிற கர்த்தரின் மேல் நம் பாரங்கள், கவலைகளை வைத்துவிட்டு விசுவாசத்துடனும், மன நிம்மதியுடனும் வாழுவோம்.

  

இரண்டு வயிற்றுப் பகுதி உண்டு : எறும்பிற்கு இரண்டு வயிற்றுப் பகுதிகள் உண்டு. ஒன்றிலிருந்து எடுத்து மற்றவைகளுக்கு ஊட்டுமாம். அதைப்போல் நாமும் கூட பிறருக்கு கொடுத்து வாழும் போது ஒரு வித சந்தோஷத்தைக் காண முடியும். ஆனால் இன்று மக்கள் எனக்கு, எனக்கு என தங்களுக்காகவே உழைத்து சேர்க்கின்றனர். தேவன் இரு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள, மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்க. நீயோ தர்மஞ்செய்யும் போது, உன் வலதுகை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது (மத்.6:3) என தேவன் சொல்கிறார். இரண்டும் ஒரே உடலில் இருந்தாலும் தெரியாமல் கொடு என்கிறார். வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். நாமும் பிறருக்கு கொடுத்து வரும் பாக்கியத்தை, நன்மையைப் பெற்றுக் கொள்வோம்.

       

இம் மூன்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்கள். அநேக நேரங்களில் நம்மை விழத்தள்ளும் காரியங்களில் நாம் எச்சரிக்கையாயிருந்து, சுறுசுறுப்பாய் நமது காரியங்களைக் கண்ணும் கருத்துமாய் செயல்பட வேண்டும். அப்பொழுது நம் வாழ்வு பிறருக்கு மாதிரியான வாழ்வாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு: 

மீடியா ஊழியங்களுக்கு படித்த திறமையான வாலிபர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al