Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.02.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Feb-2025

இன்றைய தியானம்(Tamil) 12.02.2025

 

"...தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்;..." - எரேமியா 8:7

 

வேதத்தில் காலத்தைப் பிரயோஜனப்படுத்துவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கர்த்தர் எச்சரிக்கிறார். "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்"( எபே. 5:6) "தகைவிலான் குருவி தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்" என்று கர்த்தர் கூறுவது எதற்காக? ஆகாயத்திலுள்ள நாரை, காட்டுபுறா, கொக்கு, தகைவிலான்குருவி முதலாய் தங்கள் காலத்தை அறிந்து வைத்துள்ளது. ஆனால் என் ஜனங்களோ அப்படியில்லையே என அங்கலாய்க்கிறார்.

  

இந்த நவீன காலத்தில் நம்முடைய அனைத்து விதமான தேடல்களுக்கும் வலைதளங்களை நாடுகிறோம். அதிலிருந்து அநேக ஆக்கபூர்வமான தகவல்களை நொடியில் பெற்றுக் கொள்ள முடிகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. ஆகவே நாம் எதை வலைத்தளங்களுக்குள் தேட முயற்சிக்கிறோமோ அதை மட்டுமே தேடி உடனே வெளியேறி விட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் நேரத்தையும் காலத்தையும் பிசாசு திருடிவிடுவான். ஏனென்றால் அவன் திருடனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். நீங்கள் வேதத்தை கிரமமாக வாசித்து, ஜெபிக்கிறீர்களா? உங்களோடு பழகுகிறவர்களுக்கு முன்பாக நீங்கள் எப்படி ஞானமாய் நடந்து கொள்கிறீர்கள்? வேதம் சொல்கிறது: "புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் " (கொலோ. 4:5)

         

வேதத்தில் மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, சிரசில் தைலத்தை ஊற்றி நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள். ஆனால் ஜனங்களோ அவளை ஏளனம் செய்தார்கள். அதேபோல் நீயும் ஞானமாய் நடந்து கொள்ளும் காரியத்தில், நீ காலத்தைப் பிரயோஜனப்படுத்தும் காரியத்தில் அநேகர் உன்னை ஏளனம் பண்ணுவார்கள். எப்படி மரியாளுக்கு வந்த ஏளனம் ஆசீர்வாதமாயிருந்ததோ, அதுபோல நீ நன்மை செய்தால் உண்டாகும் ஏளனம் ஆசீர்வாதம் தான்! நான் நன்மை செய்தும் எனக்கு n மன்மையில்லையே என்று நீ நினைக்க வேண்டாம்.

         

தகைவிலான் குருவிக்கு தன்னுடைய நோக்கத்தைத் தாண்டிய வேறொரு வேலை செய்யத் தெரியாது. நேரத்தை வீணாக்கத் தெரியாது. அதுபோல நாமும் ஒன்றாம் சங்கீதத்தில் கூறியுள்ளபடி பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் அமர்ந்து நேரத்தை செலவழிக்கக் கூடாது. அலைபேசியில் தேவையற்ற காரியங்களைப் பார்க்கக் கூடாது. கர்த்தர் நமக்கு நியமித்த ஓட்டத்தில் இலக்கை நோக்கித் தொடருவோம். "காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே!" 

 

"விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;..."(1 திமோ. 6 : 12).

- P.P. பொன்மணி

 

ஜெபக்குறிப்பு:

எல்லா தாலுகாவிலும் சிறுவர் முகாம்கள் நடத்தப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al