Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  11-05-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 11-May-2021

இன்றைய தியானம்(Tamil)  11-05-2021

ஜெபிக்கும் தாய் 

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” – நீதிமொழிகள் 22:6

இங்கிலாந்தில் ஜான் வெஸ்லி மெதடிஸ்ட் சபையை ஆரம்பித்தார். அவர் செய்த பிரசங்கங்களின் மூலமாக இங்கிலாந்து தேசத்தின் எல்லாப் பக்கங்களிலும் வல்லமையான எழுப்புதல் உண்டாயிற்று. அச்சமயம் இங்கிலாந்து தேசத்தில் ஏற்படவிருந்த இரத்தப்புரட்சியிலிருந்து அந்நாடு காப்பாற்றப்பட்டதற்கு இதுவே காரணம் என சரித்திர ஆசிரியர் லெக்கி கூறுகிறார். ஜான் வெஸ்லியின் ஊழிய வெற்றிக்கு காரணம் அவருடைய தாயார் சூசன்னாள்தான். அவரது சிறு வயதில் ஒருமுறை அவர்களுடைய வீட்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த தாயாரின் ஜெபத்தால் பிள்ளைகள் யாவரும் காப்பாற்றப்பட்டனர். ஜான் வெஸ்லி மிகவும் நெருக்கடியான நேரத்தில் ஜெபத்தின் உதவியால் காப்பாற்றப்பட்டார். ஆகவே அவரது தாய் அவரை தேவ ஊழியம் செய்ய பயிற்றுவித்தார். சூசன்னாள் தனது மகன் ஜான் வெஸ்லிக்குத் தன்னிடமிருந்த கல்வி, ஒழுக்கம், தேவன் பேரில் தனக்கிருந்த பக்தி ஆகியவற்றை ஊட்டி வளர்த்தார். சூசன்னாவின் வீட்டில் பிள்ளைகள் பேசக் கற்றுக் கொண்டவுடன் முதன் முதலில் அவர்களுக்கு கர்த்தருடைய ஜெபம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த ஜெபத்தை காலையும் இரவும் சொல்லும்படி பழக்குவித்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் ஒவ்வொரு பிள்ளையுடனும் ஆவிக்குரிய காரியங்களை குறித்துப் பேசினார். அந்த தாய் ஏறெடுத்த ஜெபங்களும், குடும்பத்தில் அவர் வகித்த பொறுப்பும், பொறுமையும் பிற்காலத்தில் இங்கிலாந்து தேசத்திற்கே ஆசீர்வாதமான ஊழியரை தந்தது. 

வேதத்தில் 1 சாமுவேல் புஸ்தகத்தில் அன்னாளைப் பற்றி வாசிக்கின்றோம். அன்னாளின் ஜெபம், பயபக்தி, விசுவாசம் நிறைந்த வாழ்க்கை, பிற்காலத்தில் சாமுவேல் தீர்க்கதரிசியாக தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தது. அன்னாள் தேவனிடத்தில் ஜெபித்து சாமுவேலை பெற்றுக் கொண்டாள். அவள் அவனுக்கு சிறுவயதில் கொடுத்த பயிற்சி தேவ ஆலயத்தில் வேலை செய்ய அவன் தன்னை ஒப்புக்கொடுக்க உதவிற்று. 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களுடைய பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்க எந்த அளவு முயற்சி செய்கிறீர்கள்? நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன் என்று ஓசியா 4:6ல் வாசிக்கிறோம். வேதத்தை வாசிக்கவும், அதின்படி நடக்கவும், அதை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும், அவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கவும் அனுதினமும் பிரயாசப்படுவோம். ஜான் வெஸ்லியின் தாயைப் போல் ஜெபமும், பொறுப்பும், பொறுமையும், தேவபக்தியும் உள்ளவர்களாய் மாறுவோம். கர்த்தர் உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் கடைசி கால எழுப்புதலில் நிச்சயம் பயன்படுத்துவார், ஆமென். 
-    P. சிவா

ஜெபக்குறிப்பு:
சுகவீனத்தோடு இருக்கும் நமது மிஷனெரிகளுக்கு தேவன் பூரண சுகத்தை கட்டளையிட ஜெபியுங்கள்.   

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet