Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26.01.2025
Share:

By Village Missionary Movement

Sunday, 26-Jan-2025

இன்றைய தியானம்(Tamil) 26.01.2025

 

"கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்" - சங்கீதம் 13:6

 

தாத்தா குடை

 

சாயங்கால நேரம் ராமு அண்ணன் ஸ்கூல்ல உட்கார்ந்து வெளியே பார்த்தான். ஒரே மழை! அச்சச்சோ நம்ம கிட்ட குடை எதுவும் இல்லையே என்று சொல்லி மழை லேசாக பெய்யும் போது வந்தான். பாதி தூரம் வரும் போது பெரிய தூரல் வந்து விட்டது. ராமு அண்ணன் குடை இல்லாததால் நனைந்துகொண்டே வீட்டிற்குச் சென்றான். அப்பா ராமுவை பார்த்துச் சொன்னார், "வா உனக்கு கடையிலே போய் குடை வாங்கி தாரேன்" என்றார். உடனே இந்த ராமு அண்ணனுக்கு ஒரே சந்தோஷம். என்ன குட்டீஸ் நம்ம அப்பா, அம்மா நமக்கு பிடிச்சதை வாங்கித் தந்தால் சந்தோஷமாக தானே இருக்கும். இப்போ ராமுவும் அவன் அப்பாவும் கடைக்கு போனாங்க. அப்பா, ராமு அண்ணனுக்கு ஒரு பெரிய கருப்பு கலர் குடை வாங்கிக் கொடுத்தார். பக்கத்திலே ராமுவுடன் படித்த நண்பர்களும், அந்த கடைக்கு வந்தார்கள். ராமு அப்பா வாங்கி கொடுத்த குடையை பார்த்து தாத்தா குடை என்று சொல்லி கிண்டல் செய்தனர். ராமுவின் நண்பர்கள் வாங்கிய குடையில் அழகான சோட்டா பீம், டோரா இப்படி பொம்மைகள், படங்கள் அந்த குடையில் இருந்தது. ஆனா ராமுவின் குடையில் அது இல்லை. கவலையோடு ராமு வீட்டுக்கு திரும்பினான். அடுத்த நாள் பள்ளிக்கு ராமு வழக்கம் போல வந்தான். சாயங்காலம் மழையும் வந்தது. ராமுவின் நண்பர்கள் தன் குடையில் உள்ள படங்களை பிற நண்பர்களுக்கு காண்பித்து மகிழ்ந்தார்கள். ராமு குடையைப் பார்த்து தாத்தா குடை என சொல்லி மீண்டும் கிண்டல் அடித்தார்கள். ராமு அண்ணனுக்கு கஷ்டமாயிருந்தது. இப்படி தன் நண்பர்கள் கிண்டல் செய்யும்போது ஒரு பெரிய காற்று வீசியது. அப்போது ராமுவின் நண்பர்கள் வைத்திருந்த குடையெல்லாம் உடைந்து விட்டன. ஆனா நம்ம ராமு அண்ணன் வச்சிருந்த குடை உடையாமல் இருந்தது. ராமுவை கிண்டல் செய்த நண்பர்கள் எல்லாரும் ஏய் ராமு சாரிடா மழையில நாங்க நனைகிறோம். உன் குடைக்கு வரவான்னு சொல்லி ராமுவின் குடையில் சென்றார்கள். அப்போதான் ராமு நினைத்தான், நம்ம அப்பா நமக்கு நல்ல குடை தான் வாங்கி கொடுத்திருக்காங்க, அப்படின்னு சந்தோஷத்தோடு வீட்டிற்குச் சென்றான்.

 

என்ன குட்டிஸ்! இப்படித்தான் நம்ம வாழ்க்கையில் இயேசப்பா என்ன செய்தாலும் அது நல்லதாகத்தான் செய்வார். சரியா குட்டீஸ். ராமுவை கிண்டல் செய்த நண்பர்கள் அதைப் புரிந்து கொண்டதைப் போல, நீயும் இயேசப்பாவை அறிந்து கொள்ளணும். தீமைகளையும், நன்மையாய் மாற்றும் தேவன் உன் தேவைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

- Mrs. பூவிதா எபினேசர்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al