By Village Missionary Movement
Sunday, 12-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 12.01.2025 (Kids Special)
TASTE- டான வாழ்க்கை
"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" - சங்கீதம் 34:8
Hello செல்லங்களே! Happy new year . புதிய வருடத்தைப் பார்க்க உதவி செய்த இயேசப்பாவுக்கு thanks சொல்லிடலாமா? super. இந்த புதிய வருடத்தில் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் வெற்றியடைந்து சிறப்பாய் வாழ என் வாழ்த்துக்கள். O.K story கேட்கலாமா?
யாருக்கெல்லாம் மீன் பிடிக்கும்?. எல்லாருக்குமே பிடிக்குமா? மீன் கண்ணுக்கு ரொம்ப நல்லது. முடி நல்லா வளரும். இன்னும் நிறைய health tips சொல்லுவாங்க. நல்லா மீன் சாப்பிடுங்க... O.K. உங்கள மாதிரி ஜப்பானில் இருக்கிறவங்களும் மீன், நண்டு எல்லாம் நல்லா சாப்பிடுவாங்களாம். கடலில் போய் பிடித்து, உயிரோடு கொண்டு வருவார்கள். அந்த மீன்களையெல்லாம் சீக்கிரமாய் வாங்கி விடுவார்கள். ஆனால் ஐஸ் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வருவதை அதிகமானோர் விரும்பி வாங்க மாட்டார்கள். ஏன் தெரியுமா? என்னது டேஸ்ட்டா இருக்காதா? சரியா சொல்லிட்டீங்களே!
பீட்டர் என்ற மாமா ரொம்ப தூரம் கடலில் சென்று மீன் பிடித்து, இரண்டு நாள் கழித்து தான் வருவாங்க. ஐஸ்ல வச்சு கொண்டு வர்றதால யாருமே வாங்கல. ஒரு சிலர் மட்டும் தான் வாங்கினாங்க. ஐஸ்மீன் டேஸ்ட்டே இல்லையென்று சொல்லிக் கொண்டே போனாங்க. கஷ்டப்பட்டு உழைத்தும் நல்ல வருமானம் கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டாங்க பீட்டர் மாமா. இயேசப்பா எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க என்று prayer பண்ணினாங்க. பிறகென்ன இயேசப்பா ஒரு நல்ல யோசனை கொடுத்தாங்க. கடல் பக்கத்திலேயே சுவர் வைத்து தொட்டி கட்டினாங்க. அதில் தண்ணீரை நிரப்பி வைத்தாங்க. தினமும் பிடித்த மீனை உயிரோடு தொட்டித் தண்ணீரில் போட்டாங்க. உயிருள்ள மீனை யாராவது வாங்காம இருப்பாங்களா? கண்டிப்பா வாங்குவாங்கதானே. வரிசையில் நின்று வாங்க வந்தாங்க. வியாபாரம் அமோகமாய் நடந்தது. பீட்டர் மாமாவிற்கு வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. உயிருள்ள மீன் டேஸ்ட்டா இருந்து இவ்வளவு பேரை சந்தோஷப்படுத்த முடியும்னா... இயேசப்பாவோடு வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு டேஸ்ட்டா இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பீட்டர் மாமா மீன் வாங்க வருகின்ற ஒவ்வொருவருக்கும் இயேசப்பாவை பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்.
குட்டி செல்லங்களே! கதை எப்படி இருந்தது. super- ரா இருந்ததா? மீன் டேஸ்ட்டை விட, நீங்க JESUS கூட இருக்கிற life ரொம்ப super டேஸ்ட்டா இருக்கும். இயேசப்பா இல்லாத வாழ்க்கை waste- டா போயிடும் தங்கமே... இந்தப் புதிய ஆண்டில் என் வாழ்க்கையும் புதுசா மாறட்டும், இயேசப்பான்னு கேட்டீங்கன்னா டேஸ்ட்டான life ஆக மாறிடும். உடனே முழங்கால் போடுங்க. pray பண்ணுங்க. இயேசப்பா கரத்தில் உங்களை கொடுத்திடுங்க. O.k bye!
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864