Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  09-05-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 09-May-2021

இன்றைய தியானம்(Tamil)  09-05-2021 (Kids Special)

உன்னால் முடியும் 

“...பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்;…” – 2 நாளாகமம் 14:11 

அழகான பசுமையான தேயிலை தோட்டங்களை உடைய மலைப்பகுதியில்தான் ஐரினின் வீடு இருந்தது. ஐரின் தான் மிகவும் பெலவீனமானவள் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள். எனக்கு கைவலி, கால்வலி, வயிற்று வலி என்று அழுது கொண்டேயிருப்பாள். ஒருநாள் இவளுடைய அம்மா தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்கள். ஐரின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்து வீட்டை பெருக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் மூன்று ரூம் உண்டு, இரண்டு அறையை பெருக்கினதும் ஐயோ கை வலிக்கிறதே! என்று உட்கார்ந்துவிட்டாள். பாத்திரத்தை கழுவுகிறேன் என்று எடுத்து டமால், டுமில் என்று போட்டாள். அந்த நேரம் பார்த்து அவளது பாட்டி வந்தார்கள்.

என்ன ஐரின் பாத்திரம் கழுவுகிறேன்னு எல்லாவற்றையும் உடைத்து விடாதே! உன்னால் முடியவில்லையென்றால் Rest எடுன்னு சொன்னாங்க. ஐரின் அவளது அறைக்கு சென்று அழுதாள். என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. நான் மிகவும் பெலவீனமாய் இருக்கிறேன். யாருக்குமே பிரயோஜனம் இல்லை என்று அழ தொடங்கினாள். அப்போது சுவரில் இருந்த ஒரு சிலந்தி பூச்சி அழுது கொண்டிருந்த ஐரினை பார்த்து, பேசுவது போல் இருந்தது. “நான் பெலவீனமான சின்ன பூச்சியாய் இருந்தாலும் என் கூட்டை நானேதான் கட்டுவேன். எதற்கும் கவலைப்படமாட்டேன். எவ்வளவு பெரிய அரண்மனையாக இருந்தாலும் அங்கேயும் போய் என் வீட்டை கட்டிவிடுவேன். நீயும் என்னைப் போல் நம்பிக்கையோடு இரு, உன்னால் எதையும் செய்ய முடியும் என்று சந்தோஷமாய் வாழ பழகிக்கொள்” என்று சிலந்தி பூச்சி சொல்வதுபோல் இருந்தது. 

ஐரின் சிந்திக்க ஆரம்பித்தாள். சிலந்தி பூச்சி கூட சந்தோஷமா அதனோட வேலையை செய்கிறதே எனக்கும் பெலன் தாங்க இயேசப்பா, சிலந்தி மூலமா என்னோடு பேசினதற்கு நன்றி என்று ஜெபித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, அம்மா wash பண்ணின dress எல்லாவற்றையும் மடித்து வைத்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. கைவலி, கால்வலி எல்லாம் பறந்தே போனது. ஐரின் சந்தோஷமாய் இவ்வளவு வேலை செய்திருப்பதைக் கண்ட அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. சிலந்தி அதனோட விரல்களால் Shake hands கொடுப்பதை போல் உணர்ந்தாள் ஐரின். எனக்கு நல்ல பாடத்தை கற்று கொடுத்துவிட்டாய் என்று சிலந்திக்கு நன்றி சொன்னாள் ஐரின். 

அன்பு செல்லங்களே! நீங்களும் கூட, நான் பெலவீனமா இருக்கிறேன் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறீங்களா? இல்லவே இல்லை. உங்க பெலவீனத்தை மாற்ற இயேசப்பா இருக்கிறாங்க. ஐரினை போல நீங்களும் ஜெபிங்க, உங்களால் முடியும்னு நம்புங்க. Jesus உங்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறாங்க. Don’t worry, be happy children. 
-    Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al