Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.01.2025
Share:

By Village Missionary Movement

Wednesday, 08-Jan-2025

இன்றைய தியானம்(Tamil) 08.01.2025

 

ஆராதனையாகிய பலிபீடம் 

 

"கர்த்தரே மகா தேவனும்; எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்" - சங்கீதம் 95:3

 

கர்த்தருக்கு நாம் செய்யும் ஆராதனையை வேதம் இரு வகைகளாகப் பிரிக்கிறது. 1. வீணான ஆராதனை ( மத்தேயு 15 :8, ஏசாயா 29 :13 ) 2. புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12 : 1) நம்மை உயிருள்ள ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, ஆராதிப்பது புத்தியுள்ள ஆராதனை! கர்த்தரை உயர்த்தி துதிப்பது, ஸ்தோத்தரிப்பது, காணிக்கை போன்றவை பலிபீடத்தின் மேல் செலுத்துவதும் ஆராதனையே! நாம் எப்படி ஆராதிக்க வேண்டுமென்று இன்று தியானிப்போம். இப்படி நமது ஆராதனை புத்தியுள்ள ஆராதனையாக இல்லாவிட்டால் வரும் காலங்களில் ஆராதனையாகிய பலிபீடத்தை செப்பனிட்டு ஆராதிப்போமாக!.

 

1.நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தை உயிருள்ள ஜீவபலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இதன் பொருள் என்ன? தம் சித்தத்தை எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்திற்கு அர்ப்பணித்துவிட வேண்டும். நம் சுயம், மாம்சத்தின் கிரியைகளை தேவன் எரித்துப் போடும்படி அர்ப்பணிக்க வேண்டும்.

 

2.துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வரவேண்டும். நன்றி பலிகளை செலுத்த வேண்டும். (சங்கீதம் 95 :2) (சங்கீதம் 100:4)

 

3. பரிசுத்த அலங்காரத்துடன் தொழுது கொள்ள வேண்டும். (சங்கீதம் 29: 2) நம்மை நாமும் நிதானித்து அறிந்து, பாவ அறிக்கை செய்ய வேண்டும். பாவங்களுக்காக மெய் மனஸ்தாபப்பட வேண்டும்.

 

4. ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க வேண்டும். (யோவான் 4 : 23, 24) நானும், ஆவியானவரும் என்ற உணர்வோடு, எண்ணங்களை சிதறவிடாமல், ஆராதனையின் அனைத்துப் பகுதிகளிலும் தேவ ஆவியோடு நம்முடைய ஆவி இணைந்து விட வேண்டும்.

 

5. பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்ய வேண்டும். (எபிரேயர் 12 : 28 )

 

6. நம்மால் இயன்ற காணிக்கையை நன்றியோடும், ஜெபத்தோடும் படைக்க வேண்டும்.

 

7. நம்மைத் தாழ்த்தி, தேவனை உயர்த்தி ஆராதிக்க வேண்டும். அவர் சர்வ வல்லவர். அவராலேயன்றி நம்மால் ஒன்றும் கூடாது. மகா பரிசுத்தராகிய அவரை ஆராதிக்க நாம் தகுதியற்றவர்கள். நாம் உண்மையற்றவர்கள், மாறிப் போகிறவர்கள். அவரோ உண்மையுள்ளவர், மாறாதவர் என்பதையெல்லாம் சிந்தித்து ஆராதிக்க வேண்டும்.

            

 "உமது வெளிச்சத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும். அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். (சங்கீதம் 43 : 3, 4) என்ற ஜெபத்தை செய்து, நம் ஆராதனையாகிய பலிபீடத்தை செப்பனிட்டு, புத்தியுள்ள ஆராதனை செய்வோமாக!

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு: 

இவ்வாண்டு நம் இலக்குகளை அடைய திட்டமிடும் நம் தலைவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al