Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.01.2025
Share:

By Village Missionary Movement

Saturday, 04-Jan-2025

இன்றைய தியானம்(Tamil) 04.01.2025

 

அற்புதம் வேண்டுமா?

 

"...தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு" - 1 இராஜாக்கள் 18:30

 

போதகர் பால் யாங்கிசோ அவர்களின் ஊழிய ஆரம்ப நாட்களில், ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் தேவனுடைய வழிநடத்துதலையும் பிரசன்னத்தையும் உணராததால் தோல்வியடைந்ததைப் போல எண்ணினார். பாடல்கள், ஆராதனை, சாட்சிகள், பிரசங்கம் எல்லாம் உப்புசப்பில்லாமல் இருந்தது. போதகருக்கு மிகவும் துக்கமாக இருந்தது. ஆராதனை முடிந்து மக்கள் எல்லோரும் போய்விட்டார்கள். போதகருக்கு வீட்டிற்குச் செல்ல மனதில்லை. ஆலயத்திலேயே உட்கார்ந்து விட்டார். அப்போது ஒரு கூன் விழுந்த உடலையுடைய ஒரு மனிதன் போதகரிடம் ஜெபிக்கும்படி ஆலயத்தினுள் வந்தான். போதகர் ஜெபிக்கும் மனநிலையில் இல்லை. அவன் மனம் வருந்தி கேட்டதினிமித்தம் போதகர் ஜெபித்தார். ஒரு மாற்றமும் இல்லை. இது போதகருக்கு அதிக மனசோர்வை தந்தது. நேரே ஆல்டருக்கு போனார். ஆண்டவரிடம் தன்னைத் தாழ்த்தி மனங்கசந்து கண்ணீரோடு ஜெபித்தார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வல்லமையினால் தன்னை நிரப்பினதை உணர்ந்தார். மீண்டும் அந்த கூன் விழுந்த நபருக்காக ஜெபித்த போது, அந்த நொடியில் அவர் நிமிர்ந்து நின்று பரிபூரண சுகத்தை பெற்றுக் கொண்டார். அதை அந்த ஆலயத்தில் பதுங்கியிருந்த மூன்று திருடர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்டவுடன் நடுங்கி ஆண்டவரிடம் தங்கள் வாழ்வை ஒப்புக் கொடுத்தார்கள். ஆம், போதகர் தன் இருதயத்தை ஆண்டவரிடத்தில் செப்பனிட ஒப்புக்கொடுத்த போது அற்புதங்கள் நடந்தன.

       

இதுபோல வேதத்திலும் 1 இராஜாக்கள் 18 ஆம் அதிகாரத்தில் தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை எலியா செப்பனிடுகிறார். பின்பு வானத்திலிருந்து அக்கினி இறங்குகிற அற்புதம் நடைபெறுகிறது. அங்குள்ள ஜனங்கள் அதைக் கண்டு "கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்" என்று ஆர்ப்பரித்தனர். தேசம் கர்த்தர் பக்கமாய் திரும்பிற்று.      

 

ஆம், பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும் தகர்க்கப்பட்டு கிடக்கிற ஜெப வாழ்க்கை, வேதவாசிப்பு, தேவனோடுள்ள உறவு போன்ற குறைவுள்ள காரியங்களை சரி செய்யும் போது, நிச்சயம் தேவன் அற்புதத்தைச் செய்வார். அந்த அற்புதத்தின் மூலம் புறஜாதிகள் கர்த்தரே தெய்வம் என்பதை நிச்சயம் கண்டு கொள்வார்கள். எலியாவைக் கொண்டும், பால் யாங்கிசோவைக் கொண்டும் அற்புதம் செய்த ஆண்டவர், உங்களைக் கொண்டும் அற்புதத்தைச் செய்யவல்லவர். ஆமென்.

- Bro. சிவா பழனிச்சாமி

 

ஜெபக்குறிப்பு: 

Arise Joshua & Esther திட்டத்தின் மூலம் நடைபெறும் Google meet prayer க்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al