By Village Missionary Movement
Monday, 23-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 23.12.2024
பொறாமை
"...பொறாமையோ எலும்புருக்கி" - நீதிமொழிகள் 14:30
மாலதி குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள். எனவே இவர்களுடைய வீட்டில் பொருளுக்கோ, பணத்திற்கோ குறைவில்லை. இவர்களுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த அம்மு வீட்டிலோ வசதி இல்லை என்பதினால் பொருட்களும் அதிகமாகக் கிடையாது. ஆனால் அம்மு, மாலதியின் வீட்டில் உள்ள வசதிகளைக் கண்டு பொறாமைப்படுவாள். ஒரு நாள் மாலதியின் வீட்டில் தீ பற்றி எரிய எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாயின. எதிர் வீட்டு அம்மு பாட்டு கேட்டுக்கொண்டே, தன் மனதில் நன்றாக வேணும். ஒரு ஜாமான் கூட இல்லாமல் தெருவில் நிற்க வேண்டும் என எண்ணி சந்தோஷம் அடைந்தாள். மாலதிக்கு இன்சூரன்ஸ் மூலமாக சிறிய தொகை கிடைத்தது. அவள் மீண்டும் அந்த வீட்டைக் கட்ட மண்ணைத் தோண்டும் போது தங்க நாணயப் புதையல் கிடைத்தது. மாலதி குடும்பத்தினர் மீண்டும் தங்களுடைய வசதியான வாழ்வைப் பெற்றனர். பொறாமைக்கார அம்மு நிம்மதியின்றி வாழ்ந்தாள். பாருங்கள், பொறாமை குணம் இவளது வாழ்வை சந்தோஷமாய் அனுபவிக்க முடியாததாக்கி விட்டது.
வேதத்தில் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர் தான் யோசேப்பு. யோசேப்பின் மீது தேவனுடைய திட்டம் மிக அதிகமாகவே இருந்தது. யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தை வெளிப்படுத்தின போது, சொந்த சகோதரர்களால் பகைக்கப்பட்டான். அவன் சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டார்கள். அதினால் அவனை பலவந்தப்படுத்தி, இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டார்கள். ஆனால் யோசேப்பின் மீது தேவ திட்டம் இருந்ததினால் எகிப்திற்கு அதிகாரியாக மாறினான்.
எனக்கன்பானவர்களே! எதிர் வீட்டு, அயல் வீட்டு உறவுகள் முன்னேறுவதைக் கண்டு நாம் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் ஸ்தோத்திரம் பண்ணி மகிழ்ச்சி அடைவோம். பொறாமை கேன்சர் நோய் போன்றது. கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய உயிரை வாங்கக் கூடியது. இந்த பொறாமை என்ற வியாதி நம்மை முற்றிலும் அழித்து போடக்கூடியது. மேலும் பொறாமை எதை வேண்டுமானாலும், எந்த உச்சிக்கும் கொண்டு செல்லக்கூடியது. எனவே தான் பொறாமை எண்ணும் நோயை எடுத்துப் போட்டுவிட்டு, தேவனிடத்தில் விசுவாசத்தோடு சேரக்கடவோம். உள்ளத்தை அரிக்கும் கொடிய பொறாமையை விட்டு நாம் வெளிவர தேவனால் மட்டுமே நமக்கு உதவி செய்ய முடியும். எனவே அவரின் உதவியை நாடுவோம்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் டியூஷன் சென்டரில் உள்ள பிள்ளைகள் தேவ ஞானத்தால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864