By Village Missionary Movement
Sunday, 22-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 22.12.2024 (Kids Special)
HAPPY CHRISTMAS
"இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" - லூக்கா 2:11
அன்புச் செல்லங்களே! இன்னும் இரண்டு நாட்களில் என்ன day வரப்போகுது தெரியுமா? இயேசப்பாவோட பிறந்தநாள். அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அழகான ட்ரெஸ் போட்டு, மேக்கப் பண்ணி, ஸ்வீட்டோட கிறிஸ்மஸ் கொண்டாடப் போறோம் என்று சொல்வது எனக்கு நல்லா தெரியுது. இன்றைக்கு story கேட்க ஆசை இல்லையா? ஓ... ரொம்ப ஆசையா இருக்கீங்களா? O.K.. O.K... கதை சொல்றேன் கேளுங்க.
குளிரில் நடுங்கிக் கொண்டு, கும்மிருட்டு நேரத்தில், தூக்கம் கூட வராமல், போர்வையை போர்த்திக் கொண்டு மே..மே..மே.. என்ற ஆடுகளின் சத்தத்தில் மேய்ப்பர்கள் கவலையோடு இருந்தார்கள். டிசம்பர் மாத குளிர் வீட்டுற்குள்ளேயே தூங்க முடியாது உண்மைதானே குட்டீஸ்! but ஆடு மேய்த்த மேய்ப்பர்கள் துன்பத்தைத் தவிர சந்தோஷத்தை அனுபவித்திருக்கமாட்டார்கள். யாராலும் பாராட்டப்படாத, எவரும் கண்டுக்கொள்ளாத மேய்ப்பர்களை, பரலோகம் கண்டு கொண்டது. ஆட்டுக்காரனே.. ஆட்டை ஒழுங்கா நடத்திக் கொண்டு போ... என் வயலில் எதையும் மேய விட்டுவிடாதே என்ற வசவுச் சொற்களைக் கேட்ட மேய்ப்பர்களுக்கு அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா?
நீங்க யாராவது ஏஞ்சல் பாத்திருக்கீங்களா? வாவ் ... உண்மையாவா.. கனவுல பார்த்தீங்களா? சிலர் டி.வி ல ஓ... கிறிஸ்மஸ் ப்ரோக்ராம்ல சரி.. சரி.. யாரும் நேரா பார்த்தது கிடையாது அப்படித்தானே! ஆனா மேய்ப்பர்கள் வயல்வெளியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இயேசு பிறந்த செய்தியை முதன் முதலில் அவர்களுக்குத்தான் தேவதூதன் சொன்னார். என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? உங்க வீட்ல குட்டி பேபி பிறந்தா முக்கியமான பேமிலி நபர்களிடம் தான் சொல்வோம். ஆனால் உலக இரட்சகர் பிறந்த செய்தியை மேய்ப்பர்களுக்கு சொல்லும்படி தேவன் கட்டளையிட்டார். எல்லாராலும் அற்பமாய் எண்ணப்பட்ட மேய்ப்பர்கள் ஆண்டவர் பார்வையில் எவ்வளவு மதிப்புமிக்கவர்களாய் மாறிவிட்டார்கள். பார்த்தாயா? இயேசு பிறப்பின் செய்தியை கேட்ட மேய்ப்பர்கள், ஐய்யய்யோ எனக்கு வழி தெரியாதே, ஞானம் இல்லையே எப்படி இயேசுவை பார்ப்பது என்று நின்று விடாமல், கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்த காரியத்தை நாம் பார்க்க வேண்டும் என்று சொல்லி, பெத்லகேமுக்குச் சென்று இயேசு பாலகனை பணிந்து கொண்டார்கள். தேவதூதர்களால் சொல்லப்பட்ட நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் சொன்னபடியே கண்டதால் மிகுந்த ஆச்சரியப்பட்டு தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள். சாதாரண மேய்ப்பர்களைக் கொண்டு தேவன் எவ்வளவு பெரிய திட்டத்தை வெளிப்படுத்தினார்.
அன்பான செல்லக்குட்டிகளே! இது கதை அல்ல வேதத்தில் எழுதப்பட்ட விஷயங்கள். நீங்களும் கூட நினைக்கலாம். என்னை விசாரிக்க யாரும் இல்லை. நாங்க ஏழைகள் ஒதுக்கப்பட்டவர்கள் என்று. உங்களுக்காகவும் இயேசு பிறந்திருக்கிறார். பரலோக தேவனின் பார்வை மேய்ப்பர்கள் மீது பட்டது போல உங்கள் மீதும் அவர் நோக்கமாய் இருக்கிறார். உங்க உள்ளத்தில் பிறக்க இயேசு ஆசையாய் காத்திருக்கிறார். இடம் கொடுத்துப் பாருங்கள். சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். O.K ரெடி தானே! Wish you a happy Christmas செல்லங்களே!
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864