By Village Missionary Movement
Thursday, 19-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 19.12.2024
HEALING
"…அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்" - மாற்கு 5:28
ஒரு சகோதரி இரு வருடங்களாக உதிரப்போக்கினால் பாதிக்கப்பட்டு எவ்வளவோ மருந்துகள் எடுத்தும் குணமடையாமல் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலைமையில் மரணப் படுக்கையில் காணப்பட்டார். சுகத்திற்காக பல இடங்களுக்குச் சென்றும் சுகம் பெறவில்லை. இவரது ஆயுசு நாட்கள் குறைவானது என மருத்துவர்களும் சொல்லி கைவிட்டனர். இந்த சகோதரியின் வீட்டின் அருகே ஒரு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. அதில் செய்தி கொடுப்பதற்காக வந்த போதகரிடம் இந்த சகோதரியின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டது. மறுநாள் இந்த போதகர் அந்த சகோதரியின் வீட்டிற்கு வந்து இயேசுவின் அன்பை அறிவித்து, அவர்களுக்காக ஜெபித்தார். ஜெபித்த அந்த வேளையின் போது ஒரு வல்லமை இறங்கியது. அந்த நொடியிலே உதிரப் போக்கு நின்று போனது. அந்த போதகர் அந்த சகோதரியிடம் சொன்னார், உன்னை ஆண்டவர் தெரிந்து கொண்டார் என்று. இன்று அந்த சகோதரி ஊழியம் செய்து வருகிறார்.
இதே போலவே புதிய ஏற்பாட்டில் ஒரு சம்பவம் எழுதப்பட்டுள்ளது. 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீயை நாம் அறிவோம். அந்த ஸ்திரீ அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும் சற்றும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு, நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டு, வேதனை நீங்கி, ஆரோக்கியமடைந்தாள்.
ஆம், அன்பானவர்களே! இயேசுவினால் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை உலகெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று. நாம் மற்றவர்களுக்கு இயேசுவை அறிவிக்கும் போதுதான், இயேசுவைப் பற்றி கேள்விப்படுவார்கள். கேட்பவர்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை வரும். இந்த ஸ்திரீயும் அப்படியே செய்தாள். இயேசுவை கேள்விப்பட்ட உடனே அவரை காண விரும்பினாள். அவரைத் தொட்டால் சுகமாவேன் என்கிற விசுவாசம் அவளுக்குள் வந்திருக்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட வியாதியையும் எவ்வித கேன்சர் நோயையும் சுகமாக்கும் வல்லமை இயேசுவினிடத்தில் உண்டு. அவர் தமது வார்த்தையை அனுப்பி சுகமாக்குகிற கர்த்தர். மரித்தவனையும் உயிரோடு எழுப்புகின்ற அற்புதமான, அதிசயமான ஆண்டவர். எனவே சுகம் கொடுக்கின்ற இயேசுவினிடத்தில் வந்து, சுகத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்.
- Sis. சிந்து
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் டியூஷன் சென்டருக்கு கற்றுக் கொடுக்க வரும் ஆசிரியர்கள் தேவ அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864