Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம் இன்றைய தியானம்(Tamil) 07-05-2021
Share:

By Village Missionary Movement

Friday, 07-May-2021

இன்றைய தியானம்(Tamil) 07-05-2021

 

சத்தம் கேட்கும் ஆடு

 

“...என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.” – மாற்கு 1:17

 

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானம் அமெரிக்காவில் உள்ள பென்டகனில் மோதியபோது அநேக மக்கள் அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தனர். அவர்கள் அந்த விமானம் மோதியதால் உண்டான பயங்கரமான புகை மண்டலத்திற்குள் சிக்கி, புகை அவர்கள் கண்களை மறைத்தபடியால் வெளியே வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாயினர். மூச்சுவிட முடியாமல் திணறினர். அப்போது ஐசக் ஹப்பி என்னும் போலீஸ் அதிகாரி உள்ளே ஓடி, உயிரோடு மக்கள் இருக்கின்றனரா என்று தேடினார். உள்ளே இருக்கும் நிலவரத்தை கண்டவுடன், சற்று வெளியே வந்து என் சத்தத்தைக் கேட்டு அந்த சத்தத்தை பின்தொடர்ந்து வாருங்கள் என திரும்ப திரும்ப உரத்த சத்தத்தோடே கூறிக்கொண்டே இருந்தார். அவருடைய அந்த சத்தத்தைக் கேட்டு, அநேகர் வெளியே வந்து உயிர் தப்பினர். 

 

மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுருவும் அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது, இயேசு அவர்களைக் கண்டு என் பின்னே வாருங்கள் என அழைத்தார். இயேசு கிறிஸ்து அவர்களை அழைத்தவுடன் அவர்கள் வலைகளை, படகை விட்டு அவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்து அவர் பின்சென்றார்கள். இயேசுவும் அவர்களை தன்னோடு வைத்து பழக்குவித்து, கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வல்லமையுள்ள ஊழியர்களாக மாற்றி, ஊழியப்பாதையில் பயன்படுத்தியதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். 

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! இந்த உலகத்தில் பாவத்திலும், சாபத்திலுமிருந்து வெளியே வர முடியாதபடி கோடிக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி இயேசுவானவர் என் பின்னே வாருங்கள் என்று தினந்தோறும், ஒவ்வொரு நிமிடமும் அழைத்துக்கொண்டே இருக்கிறார். நிலையில்லாத இந்த உலகத்தில் திக்கு தெரியாமல், வாழ வழியின்றி, சினிமா நடிகர்களை, அரசியல்வாதிகளை பின்பற்றி ஏமாந்து நிற்கும் ஜனங்களைப் பார்த்து இயேசுகிறிஸ்து கூறுகிறார், “என் பின்னே வாருங்கள்” என்று! மேய்ப்பனின் குரலைக் கேட்டு அவன் பின் செல்லும் ஆட்டைப் போல, அவர் சத்தம் கேட்டு அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோர், பாதுகாக்கப்படுவர், பாக்கியவான்களாய் இருப்பர். அவருடைய சத்தத்தைக் கேட்கும் ஆடுகளாக இன்றே அவருக்கு பின் செல்லுவோம், அநேகரையும் அவருக்கு பின் செல்லுபவர்களாக மாற்றுவோம்! 

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெளிவரும் வாலிபர் மாலை நிகழ்ச்சியை பார்த்து வாலிபர்கள் மத்தியில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al