Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.12.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 17-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 17.12.2024

 

விவசாயி

 

"நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார்" - 1 கொரிந்தியர் 3:6

 

ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் விதை விதைப்பதற்கு முன் தன் வீட்டிலுள்ள நபர்கள் அல்லது தனது தந்தை எப்படி விதைக்கிறார் என்று கவனமாய் பார்க்கிறார். அதைப் போலவே அவர் விதையை விதைக்கிறார். விதைக்கிற விதை எவர் கையில் இருந்தாலும், எவர் விதைத்தாலும் விளையும். அதனால் அவர் யாரிடமோ இந்த வேலையை கொடுத்து விட்டு சும்மா இருப்பதில்லை. அதிகம் விதைக்கிறானல்லவா? நிலம் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும்? தண்ணீர் எப்படி பாய்ச்சணும்? இளம் பயிரை எப்படி பார்க்கணும்? வளர்ந்த பயிரை எப்படி பார்க்கணும்? எந்த நேரத்தில் உரம் வைக்க வேண்டும்? என எல்லாமே நன்றாக அறிந்து செயல்படுவார்.      

 

இதேபோலத்தான் ஊழியம் செய்யும் ஒவ்வொரு ஊழியரும் நம்மிடமிருக்கும் விதையாகிய வசனத்தை கண்ணும் கருத்துமாக விதைக்கும் போது, அந்த விதை அதிக பலனைக் கொடுக்கும். விதையை விதைத்து விட்டு விவசாயி அதுவாக முளைக்கும் என்று கண்டு கொள்ளாமல் விடுகிறதே இல்லை. அதற்கு தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு, ஆடு, மாடு மேயாமல் வேலியடைத்து பாதுகாப்பது போல ஒவ்வொருவரும் விதைத்த வசனம் எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கவனமாக கவனிக்க வேண்டும். ஜெபம் என்ற பாதுகாப்பு எப்போதுமே நம்முடன் இருக்க வேண்டும். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” (சங்கீதம் 126:5) அவர்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். நம் கண்ணீரின் ஜெபம் தேவனிடமிருந்து பெரிய பலனை பெற்றுத் தரும். சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். ஆம், நம் தேவன் வசனமாகிய விதையை விளையச் செய்து முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.         

 

அன்புக்குரியவர்களே! நம்முடைய வார்த்தை கிருபை பொருந்தியதாகவும், உப்பால் சாரமேறியதாகவும் இருக்க வேண்டும். சுவிசேஷமாகிய விதை எவ்வளவு முக்கியமோ அதேபோலவே விதைக்கிற மனுஷனும் தேவனுடைய பார்வையில் மிக முக்கியமானவர். இன்றும் நம் தேவன் சுவிசேஷம் என்னும் விதையை விதைக்க ஆட்களை எதிர்பார்த்து காத்து நிற்கிறார். “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்று இன்றும் ஆண்டவருடைய கண்கள் மனிதர்களை தேடிக்கொண்டே இருக்கிறது. அவருடைய வேலையை செய்ய நீங்கள் முன் வருவீர்களா?

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு:

எல்லா தாலுகாவிலும் வீட்டு ஜெபக்கூடுகை ஒழுங்கு செய்யும் ஆக்கில்லா பிரிஸ்கில்லாக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al