Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.12.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 15-Dec-2024

இன்றைய தியானம்(Tamil) 15.12.2024 (Kids Special)

 

அளவிட முடியாத அன்பு

 

"அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்;…" - 1 யோவான் 3:16

 

அன்பு செல்லங்களே! எல்லாரும் கிறிஸ்மஸ்க்கு ரெடியா இருக்கீங்களா? கிறிஸ்மஸ் தாத்தா, குடில், வீட்டை அலங்காரம் பண்ணுவது இப்படி ரொம்ப பிசியாகவும் இருப்பீங்க தானே... O.K. இயேசப்பா எதற்காக பூமிக்கு வந்தாங்க... நம்மை நேசித்ததினால்.... அதைப்பற்றி ஒரு story கேட்போமா? விக்கி ரொம்ப சுட்டித்தனமுள்ள பையன். அப்பா அம்மா சொல்வதை காதில் வாங்கவே மாட்டான். அடி, உதை இதெல்லாம் விக்கிக்கு கைவந்த கலை. நீங்க எல்லாம் அப்படி இருக்க மாட்டீங்கல்ல. வெரி குட். ஓ... உங்க Class ல அப்படி இருப்பாங்களா? சரி அவங்களுக்காக Prayer பண்ணுங்க.   

 

விக்கி வம்பு சண்டை பண்ணி டீச்சர் கிட்ட மாட்டிக்கிட்டு நல்லா அடியும் வாங்குவான். படிப்பில் ரொம்ப dull. Class ல் அவன் பக்கத்தில் யாரும் உட்காருவதற்கு பயப்படுவார்கள். இது அப்பா அம்மாவுக்கு ரொம்ப வருத்தமாய் இருந்தது. விக்கி எப்பொழுதுதான் திருந்துவானோ… Sunday class போனாலாவது திருந்துவான்னு நினைத்தால் அங்கேயும் வால்தனம்தான். எதையும் கவனிக்க மாட்டான். சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு பேப்பரை தூக்கி வீசுவான். Sunday class நடத்துகிறவர்களை ஒரு வழி பண்ணி விடுவான். அவர்களும் திட்டாமல், அடிக்காம பொறுமையோடு சொல்லிக் கொடுத்தார்கள். விக்கிக்கு படம் பார்ப்பதென்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் ஞாயிறு பள்ளியில் இயேசுவின் சிலுவைக் காட்சி காண்பிக்கப்பட்டது. அதை உற்று கவனித்த விக்கியின் கண்கள் கலங்கியது தன்னை துன்பப்படுத்துகிறவர்களை எதிர்த்து ஒரு வார்த்தையும் கூட சொல்லவில்லையே. அவர்கள் மீது கோபப்படவில்லையே. கஷ்டப்படுத்தினவர்களை மன்னிக்கும்படி ஜெபிக்கின்றாரே என்று நினைத்த விக்கியின் மனம் மாறினது. சிறிது நாட்களில் அவன் குணம் மாறியது. 

 

இயேசுவின் அன்பை ருசித்த விக்கி மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தான். என்னடா சேட்டைக்கார விக்கி silent டான விக்கியாக மாறிவிட்டான் என்று கிண்டலடித்தார்கள் நண்பர்கள். ஆமா இயேசு உனக்கு அப்படி என்ன கொடுத்தார் “கேலி பண்ற உங்களை மன்னிப்பதற்கு Jesus அன்பு தந்திருக்கிறார்” என்றான் விக்கி. இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பாராத நண்பர்கள் விக்கியின் அற்புத மாற்றத்தை கண்டு இயேசப்பா மீது நம்பிக்கை வைத்தார்கள். எல்லாரும் இணைந்து ஞாயிறு பள்ளி சென்று, X mas program–இல் உற்சாகமாய் கலந்து கொண்டு அர்த்தமுள்ள , X mas கொண்டாடி இயேசப்பாவை சந்தோஷப்படுத்தினார்கள்.        

 

அன்பு தம்பி, தங்கச்சி! பகைவர்களையும் நேசிக்க அன்பென்னும் ஆயுதத்தை 

பயன்படுத்தி விட்டால், நிச்சயம் வெற்றி தான். நாமும் பாவிகளாய் இருக்கும் போது, நம்மை நேசித்தபடியால் இயேசு கிறிஸ்து பாலகனாய் பிறந்தார். அந்த அளவிட முடியாத அன்பால் நிரப்பப்பட்டு " X mas கொண்டாடுவோமா? ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் குட்டி செல்லங்களே!

- Mrs. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al